For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் இருக்கும் தமிழருக்கு நோபலுக்கு இணையான மார்கோனி பரிசு

By Siva
Google Oneindia Tamil News

Paulraj
வாஷிங்டன்: தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் மார்கோனி பரிசு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியரும், விஞ்ஞானியுமான தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்யசாமி ஜோசப் பால்ராஜுக்கு கிடைத்துள்ளது.

ரோடியோவை கண்டுபிடித்த மார்கோனியின் மகள் ஜியோயா மார்கோனி பிராகா தனது தந்தையின் நினைவாக மார்கோனி சொசைட்டியை துவங்கினார். இந்த சொசைட்டி தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் புதியவைகளை கண்டுபிடிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு ஆண்டுதோறும் மார்கோனி பரிசை அளித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான பரிசு கோவையில் பிறந்து அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் ஆரோக்யசாமி ஜோசப் பால்ராஜுக்கு கிடைத்துள்ளது.

ஜோசப் பால்காராஜின் கண்டுபிடிப்பான எம்ஐஎம்ஓ ஆன்டனா (மல்டிபிள் இன்புட் மல்டிபிள் அவுட்புட்) பிராட்பேண்ட் சேவைகளில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வை-ஃபை ரூட்டர் மற்றும் 4ஜி போன்களில் பால்ராஜின் எம்ஐஎம்ஓ தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எம்ஐஎம்ஓவை கண்டுபிடித்தற்காக தான் பால்ராஜுக்கு மார்கோனி பரிசு கிடைத்துள்ளது.

இது குறித்து பால்ராஜ் கூறுகையில்,

தொலைதொடர்பு துறையில் இரண்டு பெரிய பரிசுகளான ஐஇஇஇ அலெக்சாண்டர் கிரஹாம் பெல் மெடல் மற்றும் மார்கோனி பரிசு ஆகியவற்றை பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றார்.

English summary
Indian born scientist and Stanford university professor Arogyaswami Joseph Paulraj has been awarded the prestigious Marconi Society Prize for developing the theory and applications of MIMO antennas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X