For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் இனவெறி ஏச்சுக்கு ஆளான இந்திய தொழிலதிபர் குடும்பம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Indian business man family racially abused in Australia
மெல்பர்ன்: இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தாரை இனவெறியுடன் திட்டியதாக ஆஸ்திரேலிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் குடியின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள இப்ஸ்விச் பகுதியில் இந்தியன் மேபில் என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடத்திவருபவர் இந்தியரான ராஜ்ஷர்மா. சம்பவத்தன்று, இவரது ஹோட்டலுக்கு வெளியே நின்றபடி இரு வாலிபர்கள், வியாபார மும்முரத்தில் இருந்த, ராஜ்ஷர்மா மற்றும் அவரது இரு குழந்தைகளை இனவெறியுடன் விமர்சனம் செய்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறைக்கு ராஜ்ஷர்மா தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்து கலாட்டா செய்த 22 வயது வாலிபரை கைது செய்தனர். தகராறு செய்த, மற்றொருவர், போலீசார் வருவதை பார்த்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ராஜ்ஷர்மா கூறுகையில்; இந்தியரான நான் ஹோட்டல் நடத்தி வியாபாரம் செய்வது பிடிக்காமல் சில ஆஸ்திரேலிய வாலிபர்கள் கலாட்டா செய்வது வாடிக்கையானதுதான். ஆனால் இம்முறை மிகவும் அதிகபட்சமாக நடந்துகொண்டனர். இனத்தை குறிப்பிட்டு கேலி செய்தனர் என்றார்.

ஆஸ்திரேலியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய மாணவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போதும் இனப்பிரச்சினை பிரதானமாக பேசப்பட்டது. வெள்ளைத்தோலுடன் இருந்தால் அது உயர்ந்த இனம் என்று கருதும் அறியாமை கலந்த அடிமைத்தனம், மெத்தபடித்த ஆஸ்திரேலியர்களிடமும் உள்ளதை இதுபோன்ற சம்பவங்கள் காண்பிக்கின்றன.

English summary
An Indian businessman in Australia has claimed that his family was racially abused and spat on by two men. Raj Sharma, owner of the restaurant Indian Mehfil, along with his wife and two children, was racially abused and spat on by two men outside his restaurant in Ipswich locality in the Australian state of Queensland.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X