இந்திய எல்பிஜி கப்பல்களை அனுமதித்த ஈரான்.. இந்தியாவின் பவர் இதுதாங்க! சைலண்ட் சம்பவம்
தெஹ்ரான்: கச்சா எண்ணெய் கப்பல்களின் பாதையான, ஹர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், இந்த பாதை வழியாக 2 எல்பிஜி கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதித்துள்ளது. இதனை ராய்டர்ஸ் செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது.
இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதால், மக்கள் சிலிண்டர்களை தொடர்ந்து புக் செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில், எல்பிஜி கப்பல்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

ஈரான் மேட்டரில் இந்தியா ஒருதலைப்பட்சமாக நடந்துக்கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை கண்டிக்காமல், எதிர் தாக்குதல் நடத்திய ஈரானை கண்டித்தது, ஈரான் உச்ச தலைவர் காமெனி மரணத்திற்கு ஒரு வாரம் கழித்து இரங்கல் சொன்னது என.. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள் அமெரிக்க சார்பு நிலையை எட்டியிருக்கிறது என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இப்படி இருக்கையில், வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றி வரும் கப்பல்கள், ஹர்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் தவித்திருப்பதால், இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்தது. இந்த நிலையில்தான் இந்திய கப்பல்களை ஈரான் அனுமதித்திருப்பதாக ராய்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஈரான் தரப்பில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. எனவே உண்மையில் கப்பல்களுக்கு அனுமதி கிடைத்ததா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஒருவேளை அனுமதி கிடைத்தால், இந்த இரண்டு கப்பல்களும் மங்களுர் அல்லது கொச்சிக்கு வரும். அங்கு எரிபொருளை விநியோகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா.. ஈரான் உடனான சண்டையில் மொத்தமா போச்சு! -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
குறிவைத்து அடித்த ஈரான்.. பற்றி எரியும் இஸ்ரேல் கப்பல்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய பிரச்சனை! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி












Click it and Unblock the Notifications