For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானத்தில் அமெரிக்க பெண்ணிடம் பாலியல் தொல்லை: இந்திய என்ஜினியருக்கு 9 மாதம் சிறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிகாகோ: பறக்கும் விமானத்தில் அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட இந்திய எஞ்ஜினியருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் சீனிவாச எர்ரமில்லி, வயது 46..இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன்மாதம் 14ம் தேதி சிகாகோ செல்லும் செளத்வெஸ்ட் விமானத்தில் பயணித்தார். அவரது பக்கத்து வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவரும் உடன் பயணித்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு அப்போது 63 வயதாகும். தங்களது 34வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கணவருடன் அவர் லாஸ் வேகாஸ் பயணித்துள்ளார். பயணத்தின்போது தனது ஷார்ட்ஸுக்குள் 3 முறை கையை விட்டார் சீனிவாசா என்பது அப்பெண்ணின் புகாராகும்.

இதையடுத்துக் கைது செய்யப்பட்ட சீனிவாசா மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி லெக்ப்ளோ, 9 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவருக்கு 5000அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சீனிவாசா ஒரு வருட கோர்ட் கண்காணிப்பில் இருப்பார் என்றும் அதன் பின்னர்நாடு கடத்தப்படுவார் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனிவாசா, சிறைத் தண்டனை முடிந்து, கோர்ட் கண்காணிப்பில் இருக்கும் இந்த ஒரு வருட காலத்தில் விமான பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்குப் பிறகு அவர் நாடு கடத்தப்படுவார்.

English summary
An Indian techie has been sentenced to nine months of imprisonment on charges of sexually assaulting an American woman during a flight, and faces deportation to India after serving his sentence
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X