For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக் விவகாரம்: அமெரிக்காவுடன் கை கோர்க்க தயார் என்கிறது ஈரான்!

By Mathi
Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் கை கோர்க்க தயார் என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையினர் திடீர் விஸ்வரூபம் எடுத்து அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். தற்போது தலைநகர் பாக்தாத்தை சதாம் ஆதரவு படைகள் நெருங்கிவிட்டனர்.

இதனால் அண்டை நாடான ஈரான், சதாம் ஆதரவு படைகளுக்கு எதிராக தமது ராணுவத்தை அனுப்பியுள்ளது. இதனிடையே சதாம் ஆதரவு படையினர் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதலை நடத்தலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈராக்கிலுள்ள சதாம் ஆதரவு படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கத் தயார் என்றால் அமெரிக்காவுக்கு உதவியையும், ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் ஹசான் ரொகானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறவுகள் சீர்குலைந்திருக்கும் இல்லாத நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

English summary
Iran could contemplate cooperating with its old adversary the United States on restoring security to Iraq if it saw Washington confronting "terrorist groups in Iraq and elsewhere", Iranian President Hassan Rouhani said on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X