மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன?
டெஹ்ரான்: "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நண்பர்களுக்கு இங்கே இடமில்லை" என கறார் காட்டியிருக்கிறது ஈரான். பிரதமர் மோடியின் கோரிக்கையை அந்நாட்டு அதிபர் நிராகரித்ததாக வெளியாகும் தகவல்கள் டெல்லி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஈரானிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இந்தியாவுக்குச் சாதகமாக இல்லை. பிரதமர் மோடியின் கோரிக்கையை அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்துவிட்டதாக ஈரான் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தற்போது ஒரு போர்க்களமாகவே மாறியிருக்கிறது.

குழப்பமான 24 மணிநேரம்!
கடந்த இரண்டு நாட்களாக இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. நேற்று முன்தினம், "இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி அளித்துவிட்டது" என இந்தியத் தரப்பில் சில தகவல்கள் கசிந்தன. அதேபோல் ஒரு கப்பலும கூட மும்பை வந்தது. ஆனால், சில மணி நேரங்களிலேயே "இது வெறும் வதந்தி" என ஈரான் ஊடகங்கள் முற்றுப்புள்ளி வைத்தன. அதன்பின்னர்தான் அந்த கப்பல்.. ஏற்கனவே ரேடாரை ஆப் செய்துவிட்டு கோஸ்ட் மோடில் வந்த கப்பல் என்று தெரிய வந்தது. அனுமதி கிடைத்த காரணத்தால் அந்த கப்பல் வரவில்லை என்பது உறுதியானது.
மூடப்பட்ட ஜலசந்தி
இதனைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் (Supreme Leader) ஆயதுல்லாஹ் மொஜ்தபா கமேனி நேரடி உத்தரவின் பேரில் ஹார்முஸ் ஜலசந்தி அதிகாரப்பூர்வமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் அதிகாரபூர்வமாக இது அறிவிக்கப்படவில்லை. நேற்று புதிய உச்ச தலைவர் ஆயதுல்லாஹ் மொஜ்தபா கமேனி இதை அதிகாரபூர்வமாக மூடுவதாக அறிவித்தார். இதனால் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள சுமார் 30 இந்தியக் கப்பல்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்தது.
மோடியின் தொலைபேசி அழைப்பு:
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அதேபோல் ஈரானின் புதிய உச்ச தலைவர் ஆயதுல்லாஹ் மொஜ்தபா கமேனி உடனும் பேசினார். அப்போது, "இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) மற்றும் அங்குள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மிக முக்கியம். சரக்குக் கப்பல்களைத் தடையின்றி அனுமதிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
மோடி வைத்த கோரிக்கை - ஈரானின் 'நோ':
ஆனால், ஈரானிய ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இந்தியாவுக்குச் சாதகமாக இல்லை. பிரதமர் மோடியின் கோரிக்கையை அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்துவிட்டதாக ஈரான் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
"எங்கள் கொள்கை மிகத் தெளிவானது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகளாகச் செயல்படும் நாடுகளுக்கு இந்த ஜலசந்தியில் அனுமதி கிடையாது. குறிப்பாக, சமீபத்திய துரோகங்களுக்குப் பிறகு இந்தியா போன்ற நாடுகளுக்கு வழிவிட முடியாது"
என ஈரான் தரப்பு கறார் காட்டியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
அடுத்தது என்ன?
ஈரானின் இந்தத் திடீர் நிலைப்பாட்டினால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து மாற்று வழிகளில் எண்ணெய் வாங்க இந்தியா முயற்சித்து வரும் வேளையில், கடல் வழிப் போக்குவரத்து முடக்கம் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
-
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications