நீங்க மேலாடையின்றி இருந்தால் அருவெறுப்பாக இருக்கும்! மேற்கத்திய நாட்டு தலைவர்களுக்கு புதின் பதிலடி!
மாஸ்கோ:‛‛மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் மேலாடையின்றி இருந்தால் அஅது அருவெறுப்பாக இருக்கும். அவர்கள் மதுபானம் குடிக்கம் பழக்கம் கொண்டவர்கள்'' என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். ஜி7 மாநாட்டில் தனது உடலை பார்த்து கிண்டல் செய்த மேற்கத்திய நாட்டின் தலைவர்களுக்கு இவ்வாறு விளாடிமிர் புதின் பதிலடி கொடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. பிப்ரவரி மாதம் 24ம் தேதி துவங்கிய போர் தொடர்ந்து 4 மாதங்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போர் நடவடிக்கையை கைவிட கூறினர்.

ரஷ்யா மீது பொருளாதார தடை
இந்த தலைவர்களின் கோரிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவிசாய்க்கவில்லை. இதனால் உலக அரங்கில் ரஷ்யாவை தனித்து விட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் துவங்கின. அதாவது ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை வளர்ந்த நாடுகள் விதித்துள்ளன. அதோடு மட்டுமின்றி உக்ரைன் நாட்டுக்கும் அவர்கள் ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

ஜி7 உச்சிமாநாடு
இந்நிலையில் தான் ஜெர்மனியில் சில நாட்களுக்கு முன்பு ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு நடந்தது. பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகியவை இணைந்து ஜி7 கூட்டமைப்பாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ப் உள்பட அனைத்து நாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ப் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

கிண்டல் செய்த தலைவர்கள்
இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டையின்றி உடம்பை காட்டியபடி குதிரையில் சென்ற காட்சியை பார்த்து சில தலைவர்கள் கேலி செய்துள்ளனர். இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, ‛‛விளாடிமிர் புதின் சட்டையின்றி குதிரை உடம்போடு இருக்கிறார்'' என கேலி செய்யும் வகையில் கூறியுள்ளார். இதை கேட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ‛‛நாமும் சட்டையை கழற்றி விளாடிமிர் புதினை விட பலசாலிகள் என்பதை காட்டுவோமா?'' என கிண்டலாக தெரிவித்துள்ளார்.

அருவெறுப்பாக இருக்கும்- புதின் பதிலடி
இதுபற்றி துர்க்மெனிஸ்தான் சென்றுள்ள விலாடிமிர் புதினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் உடற்பயிற்சி செய்வது கிடையாது. நன்றாக மதுப்பானம் குடிப்பார்கள். இடுப்புக்கு கீழ் அல்லது மேல் துணியின்றி இருக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது? என்று தெரியவில்லை. அவர்களை இந்த கோலத்தில் எப்படி பார்த்தாலும் சகிக்காது. அருவெறுப்பாக தான் தோன்றும். ஒருவர் அழகாக இருக்க மதுபானம் உள்ளிட்ட கெட்ட பழக்கங்களை கைவிட்டு உடற்பயிற்சி செய்வதும், அவ்வப்போது உடலை வலுப்படுத்தும் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்'' என பதிலடி கொடுத்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications