For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகுஷிமா கதிர்வீச்சு: மக்களின் அச்சத்தைப் போக்க ‘ஆக்டோபஸ்’ சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்

Google Oneindia Tamil News

டோக்கியோ: அணுமின் நிலைய கதிர்வீச்சு குறித்து மக்களின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக புகுஷிமா அணுஉலை அருகே பிடிக்கப் பட்ட மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பொதுமக்கள் முன்னிலையில் சாப்பிட்டார் ஜப்பான் பிரதமர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு ஏற்பட்டது.பின்னர் உடனடியாக நிபுணர்களை கொண்டு அந்த கதிர்வீச்சு வெளியாகாமல் சீரமைக்கப்பட்டது.

Japanese PM eats seafood caught off Fukushima

ஆனபோதும், இன்னும் கதிர்வீச்சு பயத்தால் அணு உலைப் பகுதியில் பிடிக்கப் படும் மீன் வகைகளை சாப்பிட மக்களும், பிற உலக நாடுகளும் அஞ்சுகின்றன. எனவே, அவர்களின் அச்சத்தைப் போக்கிடும் வகையில் ஜப்பான் பிரதமர் ஜின்ஜோஅபே, புகுஷிமா அருகே பிடிக்கப்பட்ட ஆக்டோபஸ் உள்ளிட்ட பல மீன் உணவு வகைகளை பொதுமக்கள் முன்னிலையில் சாப்பிட்டு காட்டினார்.

கடல் உணவுகளைச் சாப்பிட்ட பின்னர், ‘புகுஷிமா பகுதியில் உள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகள் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது' என நம்பிக்கைத் தெரிவித்தார் ஜின்ஜோ.

English summary
Shinzo Abe, the Japanese prime minister, has tucked into a slice of octopus caught close to the Fukushima nuclear plant and declared local seafood to be "good and safe."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X