For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோபஸின் இந்தப் படம்தான்.. கூகுளின் 'கண்ணை'த் திறந்து விட்ட படமாம்!

Google Oneindia Tamil News

லண்டன்: எதற்குமே ஒரு உந்துதல் சக்தி தேவைப்படுகிறது. சாதாரணமாக இன்று நாம் பயன்படுத்தும் "கூகுள் இமேஜ் சர்ச்" பிறக்க ஒரு "இமேஜ்"தான் 15 வருடத்திற்கு முன்பு காரணமாக இருந்தது என்றால் ஆச்சரியமாக இல்லை. அந்த உந்துதலைக் கொடுத்தது அப்போதைய இளைஞர்களின் கனவுக் கன்னியான ஜெனீபர் லோபஸ் போட்டிருந்த டிரஸ் என்பது இன்னும் சுவாரஸ்யமானது.

இப்போது 45 வயதாகும் லோபஸ், 2000மாவது ஆண்டு நடந்த கிராமி விருது விழாவுக்குப் போட்டு வந்திருந்த டிரஸ்தான், கூகுள் இமேஜ் சர்ச் பிறக்கக் காரணமாக அமைந்தது.

அப்போது லோபஸ் போட்டிருந்த டிரஸ் அனைவரையும் சுண்டி இழுத்தது. அந்தடிரஸ் குறித்த செய்திக்காகவும், புகைப்படத்திற்காகவும் கூகுள் செய்தி சர்ச்சில் கூட்டம் அலை மோதியது. இதைப் பார்த்துத்தான் கூகுள் சர்ச் நிறுவனம், தனியாக புகைப்படங்களையும், சர்ச் செய்வதற்கான வசதியை கொண்டு வந்தது.

கிம்முக்கு முன்னாடி

கிம்முக்கு முன்னாடி

கிம் கர்தஷியான் காலம் இப்போதுதான். அவருக்கு முன்பு இன்டர்நெட்டை அதகளப்படுத்தி வந்தவர் ஜெனீபர் லோபஸ்தான். லோபஸ் பாட்டையும், அவரது டான்ஸையும் பார்க்க ஒரு கூட்டமே உலகம் முழுவதும் அலை பாய்ந்து கொண்டிருந்த காலம் அது.

கூகுள் ஆட்சி

கூகுள் ஆட்சி

இன்டர்நெட்டை அப்போது கூகுள் அட்டகாசமாக தன்வசப்படுத்தி வந்த சமயமும் அது. நாலு வரியில் எதை வேண்டுமானாலும் தேடலாம் என்பது அப்போது ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

மயில் போல பொண்ணு

மயில் போல பொண்ணு

அப்போது படத்தைத் தனியாக தேடும் வசதி கிடையாது. செய்திகளைத் தேடலாம், விவரம் சேகரிக்கலாம். அவ்வளவுதான். அப்போதுதான் ஜெனீபர் லோபஸ் மூலம் கூகுளின் இன்னொரு கண் திறந்தது.

ரெட் கார்பெட் பேரழகி

ரெட் கார்பெட் பேரழகி

2000வது ஆண்டு நடந்த கிராமி விருது விழாவுக்கு லோபஸ் வந்திருந்தார். அவர் போட்டிருந்த டிரஸ் அப்படி ஒரு அட்டகாசம். அத்தனை பேரின் கண்களையும் பறித்த டிரஸ் அது.

தேடோ தேடென்று தேடிய மக்கள்

தேடோ தேடென்று தேடிய மக்கள்

இந்த டிரஸ் குறித்த செய்தி பரவியதும் பலரும் கூகுளில் சர்ச்சில் வந்து இந்த டிரஸ் குறித்த தகவலைத் தேடினர். மிகப் பெரிய அளவில் நடந்த அந்த தேடுதல் வேட்டை கூகுள் நிறுவனத்தினர் சற்றே யோசித்துப் பார்த்தனர். விளைவு.. கூகுள் இமேஜ் சர்ச் அறிமுகமானது.

அதுக்கும் மேல தேடும் மக்கள்

அதுக்கும் மேல தேடும் மக்கள்

இதுகுறித்து கூகுள் நிறுவன அதிகாரி எரிக் ஸ்மித் கூறுகையில், ஜெனீபர் லோபஸ் அணிந்திருந்த டிரஸ் குறித்த தேடல்தான் கூகுள் நிறுவன அதிபர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின்னை யோசிக்க வைத்தது. அதன் விளைவு இமேஜ் சர்ச்சைத் தொடங்கினோம். மக்கள் டெக்ஸ்ட்டையும் தாண்டி தேடுதலில் உள்ளனர் என்பதையும் அப்போதுதான் அறிந்தோம்.

2001 முதல்

2001 முதல்

கூகுள் இமேஜ் சர்ச் 2001ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமானது. அப்போது அது 250 மில்லியன் படங்களை கொண்டிருந்தது. 10 வருடம் கழித்து அது 10 பில்லியனாக அதிகரித்தது.

English summary
So much so that, long before Kim Kardashian was breaking the internet, J Lo's 2000 red carpet appearance set the web ablaze. It even caught the attention of Google executive, Eric Schmidt, who has revealed that the plunging dress was his inspiration for creating Google Images. 'When Google was launched, people were amazed that they were able to find out about almost anything by typing just a few words into a computer,' he told project-syndicate.com.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X