For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாங்க.. வந்து பேசுங்க.. ஒப்பந்தம் போடுங்க.. அமெரிக்காவின் ஜான் கெர்ரி இந்தியா வருகை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த 3 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார்.

வரும் 29ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜான் கெர்ரி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.

John Kerry comes to India for India-US strategic dialogue

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் எலிசபெத் ட்ருதா, வரும் 30ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரியும், வர்த்தக செயலாளர் பென்னி பிரிட்ஸ்கரும் கலந்து கொண்டு ஆலோசனை நடத்த உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The US Secretary of State John Kerry would travel to New Delhi to attend the second India-US Strategic and Commercial Dialogue, the State Department announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X