அடுத்த தலைவலி..புதிய உருமாறிய லாம்ப்டா கொரோனா.. டெல்டா வகையைவிட கொடூரமான பாதிப்பு.. மலேசியா வார்னிங்
கோலா லம்பூர்: இந்தியாவில் மிக மோசான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிடப் புதிதாகக் கண்டறியப்பட்ட லாம்ப்டா கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசியா சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. உலக வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு நாட்டில் கொரோனா உச்சமடைந்து, பின்னர் குறைகிறது. அத்துடன் வைரஸ் பாதிப்பு முடிந்துவிட்டதாகக் கருதும்போது மீண்டும் அடுத்த அலை தாக்குகிறது. இப்படி அலை அலையாகத் தாக்குவதால் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உருமாறிய கொரோனா
இப்படி அலை அலையாக வைரஸ் பாதிப்பு ஏற்பட கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதே முக்கிய காரணமாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை டெல்டா கொரோனாவால் ஏற்பட்டது. இந்த டெல்டா கொரோனா தான் உலகின் பல நாடுகளில் அடுத்த அலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இப்படித் தொடர்ந்து கொரோனா உருமாறுவது சிக்கலை அதிகரித்துள்ளது.

லாம்ப்டா கொரோனா
இந்நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. லாம்ப்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனைக் கவனிக்கப்பட வேண்டிய கொரோனா என்றும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
Recommended Video

மிக மோசமான பாதிப்பு
இந்தச் சூழலில் இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிட லாம்ப்டா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. லாம்ப்டா கொரோனாவால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிப்பதாகவும் மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது கொரோனா அடுத்த அலையை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதிக பாதிப்பு
பெரு நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 82% லாம்ப்டா கொரோனா வகையால் ஏற்பட்டவை. மற்றொரு தென் அமெரிக்க நாடான சிலியில் 31% பேருக்கு லாம்ப்டா கொரோனா ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் இப்போது ஆறு பேருக்கு மட்டுமே லாம்ப்டா கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது எந்தளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும், தடுப்பூசிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications