For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் 5 கிரகங்களில் 'வாட்டர் பாட்டில்' கிடைக்க வாய்ப்பிருக்காம்.. சொல்கிறது நாசா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமியைப் போலவே மேலும் 5 கிரகங்களில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக நாசா கூறியுள்ளது.

இந்த கிரகங்கள் அனைத்தும் மிக மிக தொலைவில் உள்ளவையாகும். இங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை நாசா கண்டுபிடித்துள்ளதாம்.

மிக மிக சிறிய அளவிலான சாத்தியக் கூறுகள்தான் இவை என்றாலும் கூட தண்ணீர் உள்ளது என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்துவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரைத் தேடி

உயிரைத் தேடி

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழத் தகுதியான, நீர் நிறைந்த இன்னொரு உலகைத் தேடும் முயற்சிகள், ஆய்வுகள் பல காலமாக தொடர்ந்து கொண்டுள்ளன.

நிறைய நம்பிக்கை.. சின்னச் சின்ன சந்தோஷம்

நிறைய நம்பிக்கை.. சின்னச் சின்ன சந்தோஷம்

ஆனால் சமீப காலமாக நம்பிக்கையை அதிகரிக்க வைக்கும் வகையிலான செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தண்ணீர் உள்ள கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை வி்ஞ்ஞானிகள் கண்டறிய ஆரம்பித்துள்ளனர்.

5 கிரகங்களில் நீர்...

5 கிரகங்களில் நீர்...

இந்த நிலையில்தான் ஐந்து தொலை தூர கிரகங்களில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பும்

இதற்கு முன்பும்

இதற்கும் முன்பும் சில கிரகங்களில் தண்ணீர் இருக்கலாம் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக உறுதியாக தெரிவித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

எங்கே இருக்கின்றன இந்த கிரகங்கள்

எங்கே இருக்கின்றன இந்த கிரகங்கள்

WASP-17 b, HD209458b, WASP-12 b, WASP-19 b மற்றும் XO-1 b என்ற பெயரிலான இந்த கிரகங்களில்தான் தண்ணீர் இருப்பதாக நாசா கூறுகிறது. ஹப்பிள் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாகவும் நாசா கூறுகிறது.

HD209458bயில் நிச்சயம் தண்ணீர் உண்டாம்

HD209458bயில் நிச்சயம் தண்ணீர் உண்டாம்

HD209458b என்ற கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான வலுவான சாத்தியக் கூறுகள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவிக்கிறது. WASP-17 b கிரகத்தில் ஓரளவு நம்பிக்கையான சாத்தியக் கூறுகள் தென்படுகிறதாம். அதேபோல மற்ற கிரகங்களிலும் தண்ணீர் இருப்பதற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவிக்கிறது.

சீக்கிரமா கன்பர்ம் பண்ணிச் சொல்லுங்கப்பா.. கேனை எடுத்துட்டுக் கிளம்பலாம்

English summary
In an encouraging sign of life beyond earth, Nasa scientists have found faint signatures of water in the atmospheres of five distant planets. Though the presence of atmospheric water was reported previously on a few exoplanets orbiting stars beyond the solar system, but this is the first study to conclusively measure and compare the profiles and intensities of these signatures on multiple worlds, Nasa said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X