For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"உள்ளே" தள்ளுவதில் பர்ஸ்ட்… உடற்பயிற்சியில் லாஸ்ட்… இதுதாங்க இந்தியா!

Google Oneindia Tamil News

துபாய்: ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் ஜி.எப்.கே என்ற என்ற ஆய்வு நிறுவனம் 23 நாடுகளில் அந்தந்த நாட்டு மக்களின் ஆரோக்கியமான‌ உணவு பழக்கம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அன்றாட‌ வாழ்க்கை ஆகியவற்றை சர்வே செய்து வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியர்கள் 79% சதவீதத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாக முதலிடம் பெற்றுள்ளனர்.

ஜப்பானுக்கு கடைசி இடம்:

ஜப்பானுக்கு கடைசி இடம்:

இந்தோனேசியர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். இதில் ஜப்பானியர்கள் 29 % சதவீதம் பேரே ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாகவும் கண்டறியப்பட்டு கடைசி இடம் பெற்றுள்ளனர்.

தூக்கமும், ஓய்வும்:

தூக்கமும், ஓய்வும்:

போதுமான அளவு தூங்கி ஓய்வு எடுப்பதில் இந்தோனேசியர்கள் 85% சதவீதத்தினர் என முதலிடம் பெற்றுள்ளனர். இந்தியர்கள் 77% சதவீதம் பேர் என இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

இதிலும் கடைசிதான்:

இதிலும் கடைசிதான்:

இதிலும் ஜப்பானியர்கள் 39% சதவீதத்தினரே போதுமான அளவில் தூங்கி ஓய்வு எடுப்பதாக‌ கடைசி இடம் பெற்றுள்ளனர்.

உடற்பயிற்சியில் இந்தியா கடைசிள்

உடற்பயிற்சியில் இந்தியா கடைசிள்

உடற்பயிற்சி செய்வதில் சீனா மற்றும் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். இதில் இந்தியர்கள் கடைசி இடம் பெற்றுள்ளனர்.

23 நாடுகளில் சர்வே:

23 நாடுகளில் சர்வே:

23 நாடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் ஒட்டு மொத்தமாக 66% சதவீதம் பேர் போதுமான அளவில் தூங்கி ஓய்வு எடுப்பதாகவும், 59 சதவீதம் பேர் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதாகவும் 57 சதவீதம் பேர் உடற்பயிற்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

English summary
GfK's survey of 23 countries found that two-thirds of global consumers (66 percent) say that they regularly get enough sleep in order to maintain physical health. This is more popular among global women (at 69 percent), compared to 63 percent of global men.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X