For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : எட்டு முக்கிய தகவல்கள்

By BBC News தமிழ்
|
லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் சம்பவம் : ஏழு முக்கிய தகவல்கள்
Getty Images
லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் சம்பவம் : ஏழு முக்கிய தகவல்கள்
  • லண்டன் பிரிட்ஜ் மற்றும் பரோ மார்க்கெட் பகுதிகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களையடுத்து பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்களை போலீஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
  • வேகமாக சென்ற வேன் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியது. தொடர்ந்து, சந்தேக நபர்கள் வேனிலிருந்து வெளியேறி பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்தினர்.
  • சந்தேக நபர்கள் போலியான வெடிகுண்டு ஆடைகளை அணிந்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • பொது மக்களில் 48 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • லண்டன் பிரிட்ஜ் ரயில்வே நிலையம் மூடப்பட்டுள்ளது.
  • இன்று நள்ளிரவு வரை வரை லண்டன் பிரிட்ஜ் மூடப்பட்டிருக்கும் என்று போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • வாக்ஸ்ஹால் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் ஒன்றிற்கும் இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
  • தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஓர் அவசர அலுவலகத்தை போலீஸார் அமைத்துள்ளனர். அவர்களை 0800 096 1233 மற்றும் 020 7158 0197 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள் :

லண்டனில் காரை பாதசாரிகள் மீது ஓட்டி, கத்திக்குத்து, 6 பேர் கொலை, 20 பேர் காயம்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் - புகைப்படத் தொகுப்பு

BBC Tamil
English summary
Six people killed and 48 others injured, after the London terror attack in which three suspects were shot dead by police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X