லண்டன்: தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil
லண்டன் : பற்றி எரிந்த கட்டடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை
EPA
லண்டன் : பற்றி எரிந்த கட்டடத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட குழந்தை

லண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவரில் ஆக்ரோஷமாக எரிந்த தீயில் இருந்து தன் குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தாய், அந்தக் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்தார், யாராவது பிடித்துக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையி்ல். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை.

கட்டடத்திற்குள் இருந்த பெண் ஒருவர், வெளியே கூடியிருந்த கூட்டத்தினரிடையே தான் தனது குழந்தையை கீழே போடப்போவதாக சைகை செய்தததாகவும், அவர் கட்டடத்தின் 9 அல்லது 10வது மாடியில் இருந்திருக்கிலாம் என்றும் நேரில் கண்ட சமிரா லம்ரானி கூறியுள்ளார்.

கீழே போடப்பட்ட குழந்தையை ஆண் ஒருவர் ஓடிச்சென்று சரியான நேரத்தில் பிடித்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட கென்சிங்டனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பற்றிய தீயில் சிக்கி 6 பேர் கொல்லப்பட்டதாக இதுவரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலி எண்ணிக்கை உயரும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.

''கட்டடத்தின் ஜன்னலோரம் வந்து நின்ற குடியிருப்புவாசிகள் பதற்றத்துடன் கதவுகளை தட்டினார்கள், கூக்குரலிட்டார்கள்'' என்று பிரஸ் அசோஷியனிடம் லம்ரானி தெரிவித்துள்ளார்.

''ஜன்னல்கள் சிறிதாக திறந்திருந்த பகுதியில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கீழே வீசப்போவதாக சைகை செய்தார். மேலும், தனது குழந்தையை யாராவது பிடித்துக் கொள்ள முடியுமா என்றும் கேட்டார்.

''ஒரு நபர் உடனடியாக முன்னே சென்று கீழே வீசப்பட்ட குழந்தையை பிடித்தார்.''

குழந்தையை வெளியில் வீசிய அந்தத் தாயின் நிலை பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள் :

லண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீ: 6 பேர் பலி

லண்டன் தீ விபத்து (புகைப்படத் தொகுப்பு)

BBC Tamil
English summary
A baby was caught by a member of the public after being dropped from a window as fire engulfed London's Grenfell Tower, a witness has said.
Please Wait while comments are loading...