For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உஸ்ஸுன்னு 11 நிமிஷத்துல லண்டன் டூ நியூயார்க் போய்ரலாம் பாஸ்.. அப்படி ஒரு வேகமான விமானம் இது!

Google Oneindia Tamil News

லண்டன்: மணிக்கு 20 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்து லண்டனில் இருந்து 11 நிமிடத்தில் நியூயார்க் செல்லக்கூடிய ஒரு வகை புதிய விமானத்தை தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 5,567 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் தற்போது சுமார் எட்டு மணி நேரமாக உள்ளது.

London to New York in 11 minutes

இந்நிலையில், கனட நிறுவனம் ஒன்று காற்றைக் கிழித்து ராக்கெட் போல் பறக்கும் புதிய விமானத்தைத் தயாரிக்கும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய விமானங்கள் சாத்தியமானால், மேலே கூறிய லண்டன் -நியூயார்க் பயணநேரம் வெறும் 11 நிமிடமாக சுருங்கிப் போகும்.

கனட நிறுவனம்..

கனடாவைச் சேர்ந்த பொம்பார்டியர் விமான தயாரிப்பு நிறுவனம் இந்தப் புதிய விமானத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன் தலைமை பொறியாளரான சார்லஸ் முன்னர், ‘ஒலியைவிட பத்து மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் ஸ்க்ரீம்ர் என்ற ஹைப்பர்சோனிக் விமானத்தை உருவாக்க இருப்பதாக'த் தெரிவித்திருந்தார்.

ஆன்ட்டிப்போட்...

இந்நிலையில் தற்போது அதனைவிட இருமடங்கு அதிக வேகத்திலும், கான்க்ரோட் ரக விமானத்தைவிட 12 மடங்கு அதிக வேகமாகவும் பறக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த ‘ஆன்ட்டிப்போட்' என்ற விமானத்தை வடிவமைப்பதற்கான ஆயத்தப் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

மணிக்கு 20000 கிமீ வேகம்...

இந்த விமானங்களில் பத்து பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஆனால், இந்த ஹைப்பர்சோனிக் விமானம் மணிக்கு 20 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என சார்லஸ் கூறுகிறார்.

4 இறக்கைகள்...

சாதாரண விமானங்களில் இருந்து வேறுபட்டு இந்த விமானங்களில் நான்கு இறக்கைகள் அமைக்கப்படும். அவற்றில் ராக்கெட்களை உந்திக்கிளப்பும் ‘பூஸ்ட்டர்கள்' பொருத்தப்பட்டிருக்கும். இந்த பூஸ்ட்டர்கள் சில வினாடிகளுக்குள் ஐந்து மேக் வேகத்தில் 40 ஆயிரம் அடி உயரத்துக்கு விமானத்தை உந்திச்செல்ல வைக்கும். பின்னர், பூஸ்ட்டர்கள் மட்டும் தனியாக கழன்று பூமிக்கு திரும்பிவிடும்.

24 மேக் வேகம்...

அதன்பின்னர், விமானத்தில் உள்ள சூப்பர்சோனிக் என்ஜின் இயங்க ஆரம்பித்து, உச்சபட்ச வேகமான 24 மேக் வேகத்தை அடையும். அதாவது மணிக்கு 1195 கிலோமிட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒலி பயணிக்கும் வேகத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது. இந்த வேகத்தை ஒரு மேக் (Mach) வேகம் என்று கூறுவதுண்டு.

குளிரூட்டும் தொழில்நுட்பம்...

இந்த வேகத்தில் விமானம் பறந்து செல்லும் போது, அதன் இன்ஜீன்கள் சூடாகமல் தடுக்க, விமானத்தின் மூக்கு மற்றும் இறக்கை பகுதியில் சிறிய துவாரங்கள் அமைக்கப்படும். அதன்மூலம் காற்று உறிஞ்சப்பட்டு விமானத்தின் மையப்பகுதியை குளிரூட்டும் எனக் கூறப்படுகிறது.

இந்தியர்...

இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த ‘ஆன்ட்டிப்போட்' விமானத்தின் திட்ட வரைப்படத்தை தயாரித்தவர் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் ராய் என்பவர் குறிப்பிடத்தக்கது.

English summary
Charles Bombardier, the man behind the concept aircraft Skreemr which could travel at Mach 10, has now unveiled the Antipode, a hypersonic jet that he claims will cover the distance between London and New York in a mind-boggling 11 minutes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X