For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மலேசியா: துரித உணவகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்ய தடை

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய நாட்டு துரித உணவகங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தடை விதித்து அந்நாட்டு அரசு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

மலேசியாவில் உணவகங்கள், கட்டுமானப் பணிகள், குப்பைகளை நீக்குதல் மற்றும் தோட்டப்பணிகள் போன்றத் தொழில்களில் அந்நாட்டு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இப்பணிகளில் பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களே ஈடுபடுத்தப் படுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, இந்தியா, இந்தோனேசியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் தற்போது இப்பணிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக இங்குள்ள பெரும்பான்மையான உணவகங்களில் இந்தியர்களே சமையல்காரர்களாகவும், பணியாளர்களாகவும் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபகாலமாக மலேசிய மக்கள் உணவகங்களில் வேலை செய்வதில் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மலேசிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் துரித உணவகங்களில் வெளிநாட்டவர்கள் வேலை செய்வது தடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களுக்கும், வெளிநாட்டு பிரஜைகளுக்கும் அந்நாட்டு உள்துறை அமைச்சகமே கேபினெட் கமிட்டியின் செயலகமாக செயல்பட்டு வருகின்றது. இந்தக் கேபினெட் கமிட்டியின் கூட்டம் மலேசியாவின் துணைப் பிரதமர் முஹ்யுதின் யாசின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது.

மலேசிய அரசின் இந்த முடிவினை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஏராளமான இந்தியர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Malaysia's fast-food restaurants will no longer be allowed to hire foreign workers; the Home ministry said yesterday, a decision that will affect thousands of Indians who come seeking work as waiters and cooks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X