உச்சத்தில் உஷ்ணம்.. 137 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2-வது முறையாக மார்ச்சில் அதிக வெப்பம்.. நாசா தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த 137 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக அளவு வெப்பம் மிகுந்த 2வது மாதமாக க‌டந்த மார்ச் மாதத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

கடந்த 1951 முதல் 1980 வரையிலான கிட்டத்தட்ட 137 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெப்பம் பதிவாகியது. அதேபோல் நடப்பாண்டு மார்ச் மாதத்திலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

 March 2017 second hottest month on record, says NASA

முந்தையை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூடுதலாக 1.27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்த நி்லையில், நடப்பாண்டு மாரச் மாதத்தில் 0.15 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவா‌கி உள்ளது என நாசா குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 6,300க்கும் மேற்பட்ட வானிலை மையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்த தகவலை நாசா வெளியிட்டுள்ளது.

மனிதனால் சுற்றுப்புறத்தில் கலக்கும் மாசுக்கள் போன்றவற்றால் முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிக அளவில் வெப்ப நிலை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
March 2016 was the hottest on record, at 1.27 degrees Celsius warmer than the March mean temperature.
Please Wait while comments are loading...