For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: ட்விட்டரில் திட்டும் மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தலையில் ஸ்கார்ப் அணியாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். அவர்கள் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர். ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர்.

சவுதியில் மிஷல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சவுதியில் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும். இந்நிலையில் மிஷல் ஸ்கார்ப் அணியாதது பற்றி பலரும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Michelle Obama forgoes a headscarf and sparks a backlash in Saudi Arabia

இது குறித்து #ميشيل_أوباما_سفور (roughly, #Michelle_Obama_unveiled) என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 1,500 ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன. மிஷல் இந்தோனேசியா சென்றபோது மட்டும் ஸ்கார்ப் அணிந்தாரே. சவுதி அரேபியாவில் மட்டும் ஏன் அணியவில்லை என்று சிலர் கேட்டுள்ளனர்.

அவசரமாக சவுதி வந்ததால் மிஷலை யாரும் குறை கூறக் கூடாது என்று சிலர் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர். இஸ்லாத்தை அவமதித்து பிளாக்கில் எழுதியதற்காக ரைப் பதாவி என்பவருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்கப்பட்டதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் ஒபாமா சவுதி சென்றுள்ளார். அவர் மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் புதிய மன்னர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
People have criticised Michelle Obama for not wearing a head scarf in Saudi Arabia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X