For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ ஹைதராபாத்காரர் சத்யா நாதல்லா?

By Siva
Google Oneindia Tamil News

சான்பிரான்சிஸ்கோ: ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சத்யா நாதல்லா என்பவரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ- ஆக ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் சத்யா நாதல்லா(47). ஹைதராபாத்தில் பி.இ. முடித்து மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர் அங்கு படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவிலேயே வேலையில் சேர்ந்தார். கடந்த 1992ம் ஆண்டு பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.

கடந்த 23 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் சத்யாவை அந்நிறுவனத்தின் அடுத்த சிஇஓவாக ஆக்க போர்டு உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போதைய சிஇஓ ஸ்டீவ் பால்மருக்கு பதில் அவரை நியமிக்கவிருக்கிறார்கள்.

 Satya Nadella

சத்யா தற்போது மைக்ரோசாப்ட்டின் சர்வர் மற்றும் டூல்ஸ் வியாபார பிரிவின் தலைவராக உள்ளார். அவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த பிரிவின் தலைவராக உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸை மாற்றவும் போர்டு உறுப்பினர்கள் ஆலோசித்து வருகிறார்களாம்.

English summary
The board of directors at Microsoft is preparing to tap 47-year-old Hyderabad born Satya Nadella as CEO Steve Ballmer's successor and is also holding discussions to replace Chairman Bill Gates, according to media reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X