For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூயார்க்கில் ராஜபக்சேவை சந்தித்தார் நரேந்திர மோடி!

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் உரையாற்ற சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி எதுவும் பேசவில்லை என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கில் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார். பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் கொய்ராலா ஆகியோரை நேற்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

Modi Meets Lankan President Rajapaksa

நாளை வாஷிங்டன் செல்லும் மோடி, அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவின் பல்வேறு மாகாண ஆளுநர்கள், கூகுள் மற்றும் பெப்சிகோ நிறுவனத்தின் தலைவர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார்.

இதனிடையே பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ராஜபக்சேவை பிரதமர் மோடி வரவழைத்து பேசினார். இந்த சந்திப்போது தமிழர் மனித உரிமை மீறல் என்கிற பிரச்சனை பேசப்படவில்லை. விரைவில் பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi today held talks with Sri Lankan President Mahinda Rajapaksa during which key issues, including bilateral and regional, was discussed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X