For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரிதாபம்.. ஒரேநாளில் துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட 114 பேர்.. மியான்மரில் என்ன நடக்கிறது? ஷாக்கிங்

Google Oneindia Tamil News

மியான்மர்: மியான்மரில் நேற்று ஒரே நாளில் 114 பேர் நடுரோட்டில் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.. உலக நாடுகளை எல்லாம் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. மியான்மரில் நேற்று என்ன நடந்தது என்பதை பார்க்கும் முன்.. அந்த நாட்டின் பிரச்சனை குறித்து ஒரு எளிமையான விளக்கம்!

மியான்மர் 1948ல் சுதந்திரம் பெற்றதில் இருந்த அரசியல் ஸ்திரமற்ற தன்மையுடன்தான் இருக்கிறது. நேர்மையற்ற தேர்தல் முறை, அவ்வப்போது ராணுவத்தின் ஆட்சி என்று மியான்மர் கடந்த 70 வருடங்களாகவே மிக நீண்ட உள்நாட்டு போரைத்தான் சந்தித்து வந்தது.

மியான்மரில் ஜனநாயகத்தை கொண்டு வர வேண்டும் என்று போராடி ஆங் சன் சுகி.. 2016ல் அந்நாட்டின் பிரதமராக (தலைமை கவுன்சிலர்) தேர்வானார். அதன்பின் கடந்த 5 வருடமாக மியான்மரில் கொஞ்சம் ஜனநாயக ரீதியான ஆட்சி நடந்து வந்தது. கொஞ்சம்தான்!

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த வெற்றிக்கு பின் முதல்முறை ஆங் சன் சுகி பாராளுமன்றத்திற்கு மீண்டும் செல்லும் திட்டத்தில் இருந்தார். ஆனால் பாராளுமன்றம் தொடங்கும் முன் அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டது. அங்கு வாக்கு பதிவு சரியாக நடக்கவில்லை. அதனால் தேர்தல் முடிவை ரத்து செய்கிறோம். ஒரு வருடத்தில் மியான்மரில் அமைதி திரும்பும். அதுவரை நாங்களே நாட்டை கட்டுப்படுத்துவோம் என்று கூறி ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது.

 யார் கைப்பற்றியது

யார் கைப்பற்றியது

மியான்மர் ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங்தான் இந்த ராணுவ புரட்சியை செய்து இருப்பது. இவர்தான் தற்போது அங்கு ராணுவ ஆட்சியை செய்து வருவது. தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில் , எதிர்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது போல வேடமிட்டு, மொத்தமாக நாட்டையே ராணுவ தளபதி மின் ஆங் ஹலாய்ங் கைப்பற்றிவிட்டது.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இந்த 1 வருட ராணுவ ஆட்சியை எதிர்த்து மியான்மரில் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தெருவில் இறங்கி கடந்த ஒன்றரை மாதமாக போராடி வருகிறார்கள். சாலையில் போராடும் மக்களை ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு மூலம் கொன்று வருகிறது .. உங்கள் குழந்தைகளை போராட்டத்திற்கு அனுப்ப கூடாது.. அவர்களின் உயிருக்கு நாங்கள் உத்திரவாதம் இல்லை என்று ராணுவம் ஏற்கனவே வார்னிங் கொடுத்துவிட்டது.

முப்படை

முப்படை

இதையும் மீறி நேற்று முப்படை ராணுவ தினத்தில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். முப்படை தினத்தில் நடந்த இந்த போராட்டத்தில் ராணுவம் மற்றும் போலீசார் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 114 பேர் நேற்று கொல்லப்பட்டனர். இதுவரை அங்கு நடந்த துப்பாக்கி சூடுகளில் 486 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 நேற்று அதிகம்

நேற்று அதிகம்

இதுவரை நடந்ததில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில்தான் அதிக பேர் கொல்லப்பட்டுள்ளனர் . உலக நாடுகளை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது. அதோடு இங்கு ராணுவ ஆட்சி 1 வருடம் மட்டுமின்றி மேலும் நீடிக்க வாய்ப்புள்ளது. ஆங் சன் சுகி ஆட்சிக்கு வருவது கஷ்டம்தான் என்றும் கூறப்பட்டுள்ளது .

English summary
Myanmar Army rule: Shooting killed 114 protesting people in single day yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X