For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்ததாக ஆங் சாங் சூகி மீது வழக்குப் பதிவு

Google Oneindia Tamil News

யாங்கூன்: மியான்மரில் சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்ததாக அவர் மீது மியான்மர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சூகி வைக்கப்படுகிறார்.

மியான்மர் தலைநகர் நைபிடாவில் உள்ள சூகியின் வீட்டில் இருந்து வாக்கி டாக்கி, ரேடியோ உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களை கண்டெடுத்ததாக போலீஸார் நீதிமன்றத்தில் விவரித்தனர்.

Myanmar police files case against Aung San Suukyi

அந்த சாதனங்கள் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டது என்றும் போலீஸார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். மேலும் அதிபராக இருந்த வின் மின்ட் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த 1962ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி சுதந்திர போராட்டத்தை நடத்தினார்.

இதனால் அவர் 21 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் அமோக வெற்றி பெற்றார்.

அவரது மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதனால் சூகிக்கு நெருக்கமான நபரான வின் மின்ட் அதிபராக பதவியேற்றார். தலைமை ஆலோசகராக சூகி பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் மியான்மரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 642 இடங்களில் சூகி தலைமையிலான கட்சி உள்ளிட்டோர் போட்டியிட்டு அமோக வெற்றி பெர்றார் சூகி, இந்த நிலையில் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டனர்.

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்.. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்.. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?

கடந்த திங்கள்கிழமை முதல் மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

English summary
Myanmar police files case against Aung San Suukyi for illegal usage of communication equipments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X