அழகு டாக்டரை கொன்று நிர்வாணமாக்கி சூட்கேஸில் அடைத்து வைத்த கொடூரம்- ரஷ்யாவில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Blogger Ekaterina | மருத்துவரை சூட்கேஸில் அடைத்து கொலை- ரஷ்யாவில் பயங்கரம் -வீடியோ

    மாஸ்கோ: அழகு பதுமையாக வலம் வந்த அழகியல் டாக்டரை கத்தியால் குத்தி கொன்று சூட்கேஸில் நிர்வாணமாக மடக்கி மறைத்து வைத்த சம்பவம் மாஸ்கோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் பிரபலமானவர். அவர் மீது தொழில் போட்டி பொறாமையில் கொலை செய்யப்பட்டாரா அல்லது காதல் விவகாரத்தில் கொலை நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் ஏக்தேரீனா என்பதாகும். இவர் மாஸ்கோவில் அழகியல் டாக்டராக வேலை செய்து வருகிறார். மக்கள் மத்தியில் பிரபலமானவர். பெற்றோர்கள் இருந்தாலும் மாஸ்கோவில் ஒரு பிளாட்டில் தனியாக தங்கியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக மகளின் செல்போனுக்கு பெற்றோர்கள் தொடர்பு கொண்டனர் ஆனால் அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

    Russian beauty blogger found naked body packed in suitcase

    பதற்றமடைந்த பெற்றோர் மகளின் வீட்டிற்கு போலீசை அழைத்து வந்து கதவை உடைத்தனர். அறைகளை பரிசோதனை செய்த போது ரத்தக்கறை படித்த சூட்கேஸ் இருந்தது. அதை திறந்த போது அதிலிருந்து கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக சரிந்தார் ஏக்தரீனா.

    ஏக்தரீனா தோல்நோய்க்கு சிகிச்சை செய்பவர், பாலியல் ரீதியாக ஏற்படும் நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பார். நகரின் மையப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்யும் அவர் அழகானவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப்பற்றி எழுதுவார். ஏக்தரீனாவிற்கு 80ஆயிரம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். அழகும் அறிவும் நிரம்பிய அந்த பெண் கொல்லப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாஸ்கோவில் சமீபத்தில் நடந்த அழகிப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவர், தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்கடிப்பார். இவர் மீது சிலருக்கு பொறாமையும் உண்டாம்.

    ஏக்தரீனாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 32 வயது நபருடன் காதல் ஏற்பட்டது. டேட்டிங் சாட்டிங் என ஜாலியாக பொழுது போனது. கடந்த சில மாதங்களாக 52 வயது நபருடன் காதல்வயப்பட்டு சுற்றிக்கொண்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்களில் யாராவது இந்த கொலையை செய்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏக்தரீனா கொலை தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லையாம்.

    அவரது உடல் கண்டெடுக்கப்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்பு கூட அதாவது ஜூலை 22ஆம் தேதியன்று தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்படி இருக்கையில் ஏக்தரீனாவை கொன்றவர்கள் யாராக இருக்கும் என்று தீவிரமாக விசாரணையை முடிக்கி விட்டுள்ளனர் மாஸ்கோ போலீசார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+