For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க கோழிக் கறிக்கு இந்திய தடை: விதிமுறைகளுக்கு முரணானது- உலக வர்த்தக அமைப்பு!

Google Oneindia Tamil News

ஜெனீவா: அமெரிக்க கோழி இறைச்சிக்கு இந்தியா தடை விதித்தது சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என உலக வர்த்தக அமைப்பின் பிரச்னை தீர்வுக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வந்தது.

இதை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கோழி இறைச்சிக்குத் தடை:

கோழி இறைச்சிக்குத் தடை:

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி இறைச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவிற்கு நஷ்டம்:

அமெரிக்காவிற்கு நஷ்டம்:

மேலும், பல்வேறு அமெரிக்க பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இந்தியாவிற்கு பின்னடைவு:

இந்தியாவிற்கு பின்னடைவு:

இந்நிலையில் இந்தியாவின் இந்த முடிவு சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என உலக வர்த்தக அமைப்பின் பிரச்னை தீர்வுக்குழு நேற்று அறிவித்தது. இதனால், இந்த வழக்கில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

60 நாட்களுக்குள் மேல்முறையீடு:

60 நாட்களுக்குள் மேல்முறையீடு:

இருப்பினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள் இந்தியா மேல்முறையீடு செய்ய முடியும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு முடிவு:

மத்திய அரசு முடிவு:

மேலும், இதுகுறித்து கால்நடை ஆய்வாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசும் அறிவித்துள்ளது.

English summary
India’s import restrictions on chicken legs and some other farm products from the US due to fear of low-intensity' bird flu are not in line with multilateral trade rules, a World Trade Organization panel has ruled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X