For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்கள் கண்பார்வையை "ஷார்ப்"பாக பரிசோதனை செய்ய புதிய “அப்ளிகேஷன்” கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: மனிதர்களுக்கு துல்லியமாக கண்பார்வை பரிசோதனை செய்யும் புதிய ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்.

லண்டனை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சிறிய கண் பரிசோதனையில் கிட் பீக் என்ற பெயரில் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

New smartphone app can test your eyesight

போனின் கேமராவை கொண்டு கண் விழித்திரையை ஸ்கேன் செய்வதன் மூலமும், போனின் ப்ளாஷ் லைட்டை கொண்டு கண்ணில் ஏற்படும் நோய்களையும் கண்டறிய முடியும். இங்கிலாந்தில் சாதாரணமாக கண்பார்வை பரிசோதனையை செய்ய 1 லட்சம் பவுண்ட் செலவாகிறது.

ஆனால், இந்த அப் உள்ளீடு செய்வதற்காக சிறிது மாற்றம் செய்யப்பட்ட ஸ்மார்ட் போனின் விலை சுமார் 300 பவுண்ட் மட்டுமே ஆகும்.

கென்யாவில் உள்ள 233 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த ஆப் மிக சரியான கண்பார்வை பரிசோதனை முடிவுகளை தருவதாக தெரியவந்துள்ளது.

இது முழுமையான பயன்பாட்டுக்கு வரும்போது கண்பார்வை பரிசோதனை செய்ய வசதி அற்ற பல லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என இந்த அப்ளிகேஷனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

English summary
A modified smartphone with a new app can act as a ‘pocket optician' to effectively test eyesight and even scan the eye for cataracts, researchers have found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X