For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவின் அகோன்காகுவா சிகரத்தில் ஏறி 9 வயதுச் சிறுவன் சாதனை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் உயரமான சிகரமான அகோன்காகுவாவில் ஏறி 9 வயது சிறுவன் ஒருவன் சாதனை புரிந்துள்ளான்.

அர்ஜெண்டினாவின் ஆண்டிஸ் மலைத் தொடரில் அமைந்துள்ளது அகோன்காகுவா சிகரம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,962 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தை அடையும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான டைலர் ஆர்ம்ஸ்டிராங் தனது தந்தை கெவின் ஆர்ம்ஸ்டிராங் மற்றும் திபெத்திய ஷெர்பா லாவா டோன்டப் ஆகியோருடன் சேர்ந்து மேற்கொண்டன்.

பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே இந்தக் குழுவானது கிறிஸ்துமஸ்சிற்கு முதல் நாள் சிகரத்தை சென்றடைந்தது.

சாதனைப் பயணம்....

சாதனைப் பயணம்....

இந்த மலையேற்றத்தின் மூலம் சிறுவன் டைலர் அகோன்காகுவா மலைச்சிகரத்தை அடைந்தவர்களிலேயே மிகவும் இளையவன் என்ற பெருமையை பெற்றுள்ளான்.

வெற்றி நிச்சயம்...

வெற்றி நிச்சயம்...

தனது சாதனைப் பயணம் குறித்து டைலர் கூறியதாவது, ‘எந்த சிறுவர்களாலும் இதனை செய்ய முடியும். உங்கள் மனதையும், இலக்கையும் ஒருமுகப்படுத்திக்கொண்டால் வெற்றி பெறலாம்' என்றான்.

இயற்கையின் அழகு...

இயற்கையின் அழகு...

மேலும், ‘இங்கிருந்து உலகின் சூழ்நிலையை நீங்கள் காண இயலும். மேகங்கள் எல்லாம் உங்களுக்குக் கீழே செல்லும். இது உண்மையில் மிகவும் குளிரான பகுதி' என டைலர் தெரிவித்துள்ளான்.

கிளிமன்ஜாரோ....

கிளிமன்ஜாரோ....

இதற்கு முன்னர், கடந்தாண்டு ஆப்பிரிக்காவின் உயரமான மலைச்சிகரமான கிளிமன்ஜாரோவிற்கும் டைலர் ஏறியுள்ளான்.

சிறப்பு அனுமதி...

சிறப்பு அனுமதி...

அகோன்காகுவா மலைச்சிகரத்தை அடையும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ள காரணத்தால், 9 வயது சிறுவனை அழைத்துச் செல்ல நீதிபதி ஒருவரிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற வேண்டியிருந்ததாக அவனது தந்தை கெவின் தெரிவித்துள்ளார். மேலும், தசைநார் தேய்வு ஆராய்ச்சிக்கான நிதி திரட்டும் பணியாக டைலர் இந்த சாதனையில் ஈடுபட்டதால், நீதிபதி தன் மகனுக்கு அனுமதி அளித்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தீவிர பயிற்சி...

தீவிர பயிற்சி...

அதோடு, இந்த சாதனை மலையேற்றத்திற்காக தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தினமும் இரண்டு முறை அவனுக்குப் பயிற்சியளித்ததாகவும், மற்றவர்கள் தாங்கள் அவனை வற்புறுத்தியதுபோல் நினைத்தாலும் உண்மையில் இது மாறான விஷயமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர்....

இதற்கு முன்னர்....

இதற்கு முன்னர் கடந்த 2008-ம் ஆண்டில் 10 வயது அமெரிக்க சிறுவனான மாத்யூ மோனிஸ் இந்த சாதனையைப் புரிந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A nine-year-old boy from the United States has become the youngest person to reach the summit of Aconcagua, the highest mountain in the Americas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X