For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செத்தா செத்ததுதான், 'நோ' சொர்க்கம்.. 'நோ' நரகம்.. 'நோ' மறுபிறவி.. ஹாக்கிங்

Google Oneindia Tamil News

லண்டன்: மறு பிறவி. சொர்க்கம், நரகம்..இவையெல்லாம் நிஜமா.. நாம் இறந்த பின்னர் என்ன ஆவோம்.. எங்கு போவோம்... நமது உயிர் என்னாகும்.. ஆவி, பேய் உண்டா.. இதற்கெல்லாம் விடை தெரியாமல் அத்தனை பேருமே அலை பாய்ந்தபடிதான் உள்ளோம். ஆனால் இது எதுவுமே கிடையாது. இறப்போடு எல்லாம் முடிந்து போய் விடும் என்று அடித்துக் கூறி விட்டார் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.

மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் என்பதோ கிடையாது என்றும் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதெல்லாம் ஜாலிக்காக பரப்பப்பட்ட கட்டுக்கதைகள் என்றும் ஹாக்கிங் கூறியுள்ளார்.

மக்களின் மரண பயத்தை போக்கவே இதுபோன்ற கதைகளை சிலர் கிளப்பி விட்டதாகவும், அதுவே வழி வழியாக மக்களின் நம்பிக்கையாக மாறிப் போய் விட்டதாகவும் கூறுகிறார் ஹாக்கிங்.

மூளை செயலிழந்தால் அவ்வளவுதான்

மூளை செயலிழந்தால் அவ்வளவுதான்

இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில் மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது செயலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது.

மரணத்துடன் கண்ணாமூச்சி

மரணத்துடன் கண்ணாமூச்சி

நான் கடந்த 49 வருடமாக மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை. ஆனால் மரணிக்க நான் அவசரப்படவில்லை.

நிறைய செய்ய வேண்டும்

நிறைய செய்ய வேண்டும்

நான் நிறைய சாதிக்க ஆசைப்படுகிறேன். பல விஷயங்களை நான் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை. அதையெல்லாம் செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர் போலத்தான் மூளையும்

கம்ப்யூட்டர் போலத்தான் மூளையும்

மூளையும ஒரு கம்ப்யூட்டர் போலத்தான். எப்படி கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்கள் செயலிழந்தால் அது செயலிழந்து போகுமோ அதுபோலத்தான் மூளையும்.

சொர்க்கமும் இல்லை.. நரகமும் இல்லை

சொர்க்கமும் இல்லை.. நரகமும் இல்லை

மூளை செயலிழந்து விட்டால் அவ்வளவுதான். அனைத்தும் முடிந்து விடும். அதன் பிறகு எதுவுமே இல்லை. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.

மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை

மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் அவை என்றார் ஹாக்கிங். இதுகுறித்து தனது The Grand Design என்ற நூலிலும் விரிவாகப் பேசியுள்ளார் ஹாக்கிங்.

21 வயது முதல்

21 வயது முதல்

ஹாக்கிங் தனது 21 வயது வரை சாதாரணமானவராகவே இருந்தார். அவரது 21வது வயதில் அவருக்கு மோட்டார் நியூரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் சக்கர நாற்காலியில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

மரணத்தை மிரட்டியவர்

மரணத்தை மிரட்டியவர்

அவர் சில வருடமே வாழ்வார் என டாக்டர் கூறிய நிலையில் தற்போது 69 வயதைத் தாண்டி அட்டகாசமாக போய்க் கொண்டிருக்கிறது ஹாக்கிங்கின் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The noted British scientist Stephen Hawking has said that there is no heaven or afterlife after death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X