Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பே இல்லை... தாலிபான்கள் அடாவடி பதில்

Subscribe to Oneindia Tamil

காபூல்: அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் (செப்.11 தாக்குதல்) அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு எந்த தொடர்புமே இல்லை; அதற்கான ஒரு ஆதாரமும் கிடையாது என்று ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அடாவடியாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Taliban கூட America நடத்தும் ரகசிய பேச்சுவார்த்தை? வெளியான பரபரப்பு தகவல்

    ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள தாலிபான்கள், புதிய அரசு எப்படி அமையும் என்பது தொடர்பாக தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். கடந்த 1996-2001-ம் ஆண்டு கால காட்டாட்சியை தாலிபான்கள் மீண்டும் நடத்துவார்கள் என்கிற பெரும் அச்சம் ஆப்கான் மக்களிடத்தில் மட்டுமின்றி உலக நாடுகளிடமும் இருந்து வ்ருகிறது.

    இதனால் பல்லாயிரக்கணக்கான ஆப்கான் நாட்டவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனை விரும்பாத தாலிபான்கள் ஆப்கான் மக்கள் வெளிநாடுகளுக்கு தப்புவதற்கும் தடை விதித்துள்ளனர். மேலும் பணிக்கு சென்ற பெண்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டும் எனவும் தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    உலக நாடுகளுக்கு நட்பு கரம்

    உலக நாடுகளுக்கு நட்பு கரம்

    அதேநேரத்தில் உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான பல்வேறு பகீரத முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் தாலிபான்கள். இதன் ஒரு கட்டமாக இடைவிடாமல் செய்தியாளர்கள் சந்திப்பு, ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பது என படுபிஸியாக இருக்கின்றனர் தாலிபான் செய்தித் தொடர்பாளர்கள். ஒவ்வொரு உலக நாடுகளும் தங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கும் என்பதை புரிந்து கொண்டு தாலிபான்கள் பேட்டி அளித்துவருகின்றனர். உதாரணமாக இலங்கை ஊடகத்துக்குப் பேட்டி கொடுத்த தாலிபான்கள், புத்தர் சிலை தகர்ப்பு போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது; இலங்கையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவர் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளைக் கொடுத்தனர். இதனையடுத்து இலங்கை அரசும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது. இதனால் பாகிஸ்தான், சீனாவை தொடர்ந்து இலங்கை அரசும் தாலிபான்களை ஆதரிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பே இல்லை

    ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பே இல்லை

    இந்த நிலையில் தாலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், என்.பி.சி. டிவிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் (செப்.11 தாக்குதல்) தகர்க்கப்பட்டதில் அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பிருக்கிறது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்காகவே நடத்தப்பட்ட 20 ஆண்டு காலமாக யுத்தத்தின் பின்னும் கூட ஒசாமா பின்லேடனுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவும் இல்லை. ஆப்கானிஸ்தானில் யுத்தம் நடத்துவதற்கு அமெரிக்கா சொல்லுகிற ஒரு சாக்குப் போக்கு காரணம்தான் அது. இந்த யுத்தத்தை நியாயப்படுத்த முடியாது என்றார்.

    செப்டம்பர் 11 தாக்குதல்

    செப்டம்பர் 11 தாக்குதல்

    2001-ம் ஆண்டு தாலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்தது. அப்போது உலகை அச்சுறுத்திய பயங்கரவாத இயக்கமான ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா இயக்கத்துக்கு தாலிபான்கள் ஆதரவு அளித்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் இயங்கி வந்த இரட்டை கோபுரம் உள்ளிட்டவை மீது மொத்தம் 4 விமானங்களை மோதவிட்டு பயங்கரமான தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் உலகத்தின் போக்குகளில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அரசுகளுக்கு எதிராக எந்த காரணத்துக்கு ஆயுதமேந்தி போராடினாலும் அத்தனை பேரும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நாடுகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது.

    அமெரிக்கா யுத்தத்தின் விளைவுகள்

    அமெரிக்கா யுத்தத்தின் விளைவுகள்

    கடந்த 20 ஆண்டுகளாக தாலிபான்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் யுத்தம் நடத்தியது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை. ஆனால் 20 ஆண்டுகளாகியும் அமெரிக்காவால் தாலிபான்களை ஒடுக்க முடியவில்லை. இதனால் ஆப்கானைவிட்டே அமெரிக்காவின் படைகள் வெளியேறின. இதனையடுத்து இப்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசமாகி உள்ளது. அதேபோல் ஈராக்கில் அதிபராக இருந்த சதாம் உசேன், லிபியாவின் கடாபி என பலரது அழிவுக்கும் இந்த செப்டம்பர் 11 - இரட்டை கோபுர தாக்குதல் காரணமாக இருந்தது. அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற உலகப் பயங்கரவாத இயக்கம் உருவெடுக்கவும் செப்டம்பர் 11 தாக்குதலும் அதன் எதிர்வினையாக அமெரிக்கா நடத்திய யுத்தங்களும் காரணமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஒசாமா பின்லேடன் யார்?

    ஒசாமா பின்லேடன் யார்?

    1957-ல் செளதியில் கோடீஸ்வரருக்கு மகனாக பிறந்தவர் ஒசாமா. இஸ்லாமிய மதக்கோட்பாடுகளில் தீவிரம் காட்டியவர். 1988-ல் அல்கொய்தா எனும் பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கினார். அல்கொய்தா அமைப்புக்கு 1996-ல் ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். இதன் பின்னணியில் பாகிஸ்தானும் இருந்தது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தற்கொலைப்படை தீவிரவாதிகள் தகர்த்து பல்லாயிரம் பேரை படுகொலை செய்தனர். இதனையடுத்து அல்கொய்தாவுக்கு எதிரான வேட்டையை அமெரிக்கா தொடங்கியது. அல்கொய்தா அமைப்பு கடுமையாக ஒடுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்காவின் அதிரடிப்படையினர் சுட்டுப் படுகொலை செய்து பகைதீர்த்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+