For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளே இல்லை.. சொல்கிறார் ராணுவ செய்தி தொடர்பாளர்

By Karthikeyan
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகளே இல்லை என்றும் அனைவரையும் கொன்று விட்டதாகவும் அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிம் சலீம் தேஜ்வா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை குறி வைத்து ராணுவம் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தியதில், 3,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இப்போது நாட்டில் பயங்கரவாதிகளே இல்லை. அனைவரையும் ஒழித்து விட்டோம்' என்று தெரிவித்தார்.

 No militant hideout in Pakistan

மேலும், இந்த பயங்கரவாத தடுப்பு வேட்டையில் 537 வீரர்கள் பலியாகி உள்ளனர். 2,272 வீரர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உளவுத்துறையினர் நாடு முழுவதும் பணியாற்றி பயங்கரவாதிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.

2,600 கி.மீ. தூரமுள்ள ஆப்கானிஸ்தான் எல்லையை கண்காணிப்பதும், 30 லட்சம் ஆப்கான் அகதிகளை பராமரிப்பதும் தான் சவாலான பணிகளாக உள்ளது என்று தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் உள்ளூர் வெளியூர் தீவிரவாதிகளுக்கு எதிராக ஷார்ப்-இ-அஸ்ப் என்ற ஆபரேஷனை பாகிஸ்தான் தொடங்கியது என்றும் தெரிவித்தார்.

English summary
No militant hideout in Pakistan,Military spokesman Lt Gen Asim Saleem Bajwa said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X