For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனிமே நிம்மதியா தூங்கலாம்.. அணுகுண்டு பயமில்ல.. சந்தோசமாக பேசிய டிரம்ப்!

இனி வடகொரியாவிடம் இருந்து அணு ஆயுத தொல்லை இருக்காது நிம்மதியாக தூங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: இனி வடகொரியாவிடம் இருந்து அணு ஆயுத தொல்லை இருக்காது நிம்மதியாக தூங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் நேற்று சிங்கப்பூரில் சந்தித்தார்கள். பலத்த பாதுகாப்பிற்கு இடையில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

உலக வரலாற்றில் இந்த சந்திப்பு பெரிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. மனிதன் நிலவுக்கு சென்றபின் இவர்கள் இருவரும் சிங்கப்பூருக்கு சென்று சந்தித்துக் கொண்டதே பெரிய மனித குல சாதனையாக பார்க்கப்படுகிறது.

அணு

அணு

இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது.எலியும் பூனையுமாக இருந்த இரண்டு பேரும் சந்தித்துள்ளார்கள். அவர்கள் சந்திப்பின் முடிவில் அணு ஆயுதத்தை கைவிட போவதாக வடகொரியா அறிவித்தது. உலக நாடுகள் எல்லாம் எதிர்பார்த்த அந்த கோரிக்கையை வடகொரியா ஏற்றுக்கொண்டுள்ளது. இது உலக அமைதிக்கு பெரிய தொடக்கமாகும்.

தடை நீக்கம்

தடை நீக்கம்

இந்த சந்திப்பிற்கு பின் அமெரிக்க அதிபர் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார். அதன்படி வடகொரியா மீது அமெரிக்கா நிறைய பொருளாதார தடை விதித்து இருந்தது. அந்த தடைகளை நீக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த சந்திப்பில் பேசப்பட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும்.

நல்ல எதிர்காலம்

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய டிரம்ப் ''திரும்பி வந்துவிட்டேன். நீண்ட பயணம், நான் பதவியேற்ற முதல்நாளை விட இன்று எல்லோரும் மிகவும் பாதுகாப்பாக உணர்வார்கள். வடகொரியாவில் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது. கிம் ஜோங் உன்னை சந்தித்தது மிகவும் நன்றாக இருந்தது. வடகொரியாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

உறங்குங்கள்

மேலும் ''நான் இந்த அலுவலகத்திற்கு வரும் முன் எல்லோரும் நாமும் வடகொரியாவுக்கு போர் செய்ய போகிறோம் என்று நினைத்தார்கள். ஒபாமா, வடகொரியாதான் நம்முடைய பெரிய பிரச்சனை என்று கூறினார். இனி அப்படி இல்லை. எல்லோரும் நன்றாக உறங்குங்கள்'' என்றுள்ளார்.

English summary
No more Nukes threat from North Korea says Trump after the summit with Kim, He, Just landed - a long trip, but everybody can now feel much safer than the day I took office. There is no longer a Nuclear Threat from North Korea. Meeting with Kim Jong Un was an interesting and very positive experience. North Korea has great potential for the future!. Before taking office people were assuming that we were going to War with North Korea. President Obama said that North Korea was our biggest and most dangerous problem. No longer - sleep well tonight! Tweeted from his account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X