மகா டேஞ்சரான வளர்ச்சியில் வட கொரியா.. இந்தியாவுக்கும் ஆபத்து இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: பொருளாதாரம், சமூக ரீதியாக எப்படியோ, ஆனால் தாக்குதல் பலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் வட கொரியா வளர்ந்துள்ளது. அதனிடம் உள்ள ஏவுகணைகளைக் கண்டு அமெரிக்கா அஞ்சுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

மிக மிக சாதாரணமாக இருந்த வட கொரியாவின் ஏவுகணைத் திட்டம் இன்று உலக நாடுகளை மிரட்டும் வகையில் விஸ்வரூப வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அது வைத்துள்ள ஏவுகணைகளால் இந்தப் பக்கம் இந்தியா வரையிலும் தாக்க முடியும். அந்தப் பக்கம் அமெரிக்காவைத் தொட்டு துடைத்தெடுக்கவும் முடியும்.

கடந்த 30 வருடங்களில் வட கொரியாவின் ஏவுகணை வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகையே மிரட்டும் அளவுக்கு அதன் வசம் அதி நவீன ஏவுகணைகள் உள்ளன.

69 வருட காலத்தில்

69 வருட காலத்தில்

வட கொரியாவுக்கு இப்போது வயது 69 ஆண்டுகள். இதுவரை இல்லாத அளவுக்கு அந்த நாடு ஆயுத பலத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அதை விட பலமாக தற்போது மிரட்டல் நாடாக மாறி நிற்கிறது வட கொரியா.

சோவியத் யூனியனே போய் விட்டது

சோவியத் யூனியனே போய் விட்டது

வட கொரியா பிறப்பதற்கு காரணமே சோவியத் யூனியன்தான். ஆனால் சோவியத் யூனியனே இல்லாமல் போய் விட்டது. வட கொரியா நிலைத்து நிற்கிறது. அதேசமயம், உலக அமைதிக்கு பெரும் மிரட்டலாக மாறி நிற்கிறது.

சமீப காலமாக படு வேகம்

சமீப காலமாக படு வேகம்

சமீப காலமாக வட கொரியாவின் ஆயுத வளர்ச்சி படு வேகமாக இருக்கிறது. ஐநா. தடைகளையும் தாண்டி அது ஆயுத ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நவீன ஏவுகணைகள்

நவீன ஏவுகணைகள்

வட கொரியாவிடம் தற்போது அதி நவீன ஏவுகணைகள் உள்ளன. அபாயகரமான அந்த ஏவுகணைகளை வைத்து அது அமெரிக்காவை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

4 ஏவுகணைகள்.. 6000 கிலோமீட்டர் காலி!

4 ஏவுகணைகள்.. 6000 கிலோமீட்டர் காலி!

வட கொரியாவிடம் தற்போது உள்ள நான்கு ரகமான ஏவுகணைகள் மூலம் 1000 கிலோமீட்டர் முதல் 6000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்க முடியும்.

ஜப்பான் டூ அமெரிக்கா

ஜப்பான் டூ அமெரிக்கா

நொடோங் ரக ஏவுகணைகள் மூலம் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை வட கொரியாவால் தாக்க முடியும். டேபடோங் 1 மூலம் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளக் குறி வைக்க முடியும். முசுடான் மூலமாக அது சீனா உள்ளிட்ட நாடுகள் மீது கை வைக்கலாம். டேபடோங் 2 மூலமாக அது இந்தியா, அமெரிக்காவைக் குறி வைக்க முடியும்.

ஆஸ்திரேலியா தொட்டு விடும் தூரம்

ஆஸ்திரேலியா தொட்டு விடும் தூரம்


தற்போது வட கொரியாவின் இலக்கிலிருந்து தப்பும் நாடு எது என்று பார்த்தால் அது ஆஸ்திரேலியாவாக உள்ளது. இருப்பினும் அதையும் கூட தனது எல்லைக்குள் கொண்டு வரும் நாள் தூரத்தில் இருக்க வாய்ப்பில்லை.

இது "குழந்தை பாடும் தாலாட்டு" என எண்ணியவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.. இது "முகாரி" என்று!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
North Korea has become the most dangerous country in last 30 years as it has amassed huge missiles which pose major threat to the most of the world nations including India and US.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற