வெற்றி.. வெற்றி.. வெற்றி.. சந்தோஷத்தில் துள்ளும் அதிபர் கிம் ஜோங் உன்.. வடகொரியாவில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பியோங்யாங்: உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், வட கொரியா இதை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 58.6 கோடி மக்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64.2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வடகொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக புதிய பாதிப்பு எதுவும் கண்டறியப்படாத நிலையில், இத்தொற்றுக்கு எதிராக நாடு 'மிளிரும் வெற்றி' பெற்றுள்ளதாக அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

தொடக்கம்

தொடக்கம்

கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகள் முழுவதிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தத் தொடங்கியது கொரோனா தொற்று. இதன் காரணமாக, பொருளாதார முடக்கம், வேலையின்மை, மருத்துவமனைகள் பற்றாக்குறை, உயிரிழப்பு என பல பாதிப்புகளை நாம் எதிர்கொண்டிருந்தோம். இதற்கிடையே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த பாதிப்பிலிருந்து சற்று மீண்டிருக்கிறோம். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக வட கொரியாவில் புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், இத்தொற்றுக்கு எதிராக நாடு 'மிளிரும் வெற்றி' பெற்றுள்ளதாக அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

வெற்றி

வெற்றி

சமீபத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மத்தியில் கலந்துரையாடிய அவர், "கொடிய நோய்க்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம்" என அறிவித்திருக்கிறார் என அந்நாட்டு அரசு ஊடகமான KCNA தெரிவித்துள்ளது. இந்நாடு தொற்று பாதிப்பை எதிர்கொண்டதிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றியது. சீனாவுடனான தனது எல்லையை மூடுவதாகவும் அறிவித்து தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டது.

புதிய பாதிப்பு இல்லை

புதிய பாதிப்பு இல்லை

இதனையடுத்து கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங்கில் ஓமிக்ரான் தொற்று பாதிப்பை பெருவெடிப்பாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக அதிகபட்ச அவசரக்கால தொற்றுநோய் தடுப்பு அமைப்பை அந்நாட்டு அரசு செயல்படுத்த தொடங்கியது. இந்த தொற்று குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பை, 'காய்ச்சல்' என்றே பதிவு செய்துள்ளது. தற்போது கடந்த ஜூலை 29ம் தேதி முதல் நாட்டில் புதியதாக தொற்று பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

 இறப்பு விகிதம்

இறப்பு விகிதம்

"நம்முடைய இந்த வெற்றி மகத்தானது. இது ஒரு வரலாற்று நிகழ்வு, இதுதான் நமது நாட்டின் மகத்துவம். நமது மக்களின் விடாமுயற்சி மற்றும் நமது தேசத்தின் பழக்க வழக்கங்கள் என்ன என்பதை உலகத்திற்கு இந்த வெற்றி எடுத்துக்காட்டியுள்ளது" என கிம் ஜாங் உன் தனது உரையில் கூறியுள்ளார். இந்நாட்டில் கடந்த ஏப்ரல் மாத்தில் சுமார் 48 லட்சம் பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இறப்பு விகிதம் வெறும் 0.002 சதவிகிதமாக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Recommended Video

    Tejas-க்கு No சொல்லும் Australia..காரணம் America? | Agnipath Update | *Defence
    தென் கொரியா நிலைமை

    தென் கொரியா நிலைமை

    ஆனால் இந்நாடு மோசமான சுகாதாரத்துறை கட்டமைப்பை கொண்டிருப்பதாகவும் தொற்றுக்கு எதிராக செயலாற்ற மருத்துவமனைகள் இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதை ஒப்பிடும்போது சிறந்த சுகாதார கட்டமைப்பை கொண்டுள்ள தென் கொரியா, கொரோனா இறப்பு விகிதத்தில் வட கொரியாவை விட சற்று அதிகமாகவே கொண்டுள்ளது. இந்நாட்டில் 0.12 சதவிகிதம் பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+