For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது யு.எஸ். போர் விமானங்கள் அதிரடித் தாக்குதல்!!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் மீது வான்வழி தாக்குதல்களை நடத்த அமெரிக்கா ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். அந்நாட்டின் பெரும்பாலான நகரங்களை அந்த இயக்கம் கைப்பற்றிவிட்டது. இந்த பகுதிகளையும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளையும் இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற நாட்டையும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் தங்களது இயக்கத்தின் பெயரையும் இஸ்லாமிய தேசம் என்று மாற்றியுள்ளனர். கடந்த சில மாதங்களாக இந்த இயக்கத்தினரின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படுகிறது.

Obama authorizes 'targeted' airstrikes in Iraq

இவர்கள் மீது தாக்குதல் நடத்த உதவுமாறு ஈராக் அரசு பலமுறை வேண்டுகோள் விடுத்துப் பார்த்தது. ஆனால் அமெரிக்கா அதிபர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஒபாமா, ஈராக்கில் இனப்படுகொலை நடைபெற சாத்தியம் உள்ளதால் அதை தடுக்க நாங்கள் கவனமுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவோம்.

கிளர்ச்சியாளர்களின் முற்றுகையில் ஈராக்கின் வடக்கு மலைப்பகுதியில் சிக்கி தவிக்கும் மத சிறுபான்மையினரை காப்பாற்ற ஈராக் படைகளுக்கு உதவி தேவைப்பட்டால் வான்வழி தாக்குதல் நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அதே நேரத்தில் ஈராக்கில் மீண்டும் முழு அளவிலான போருக்கு தாம் அனுமதிக்கவில்லை என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஒபாமாவின் இந்த உத்தரவைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 1% உயர்ந்துள்ளது. இன்றைய சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 106.28 டாலராக இருந்தது. அதேபோல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையும் 1,377 டாலராக இருந்தது.

English summary
President Barack Obama authorized US airstrikes in northern Iraq on Thursday night, warning they would be launched if needed to defend Americans from advancing Islamic militants and protect civilians under siege. His announcement threatened a renewal of US military involvement in the country's long sectarian war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X