இந்தியாவிடம் தப்பிய மசூத் அசார்.. பலியான குடும்பத்தினருக்கு அரசு மரியாதை.. பாக். ராணுவம் அடாவடி
இஸ்லாமாபாத்: காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இன்று நம் நாடு பதிலடி கொடுத்தது. இதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் அக்காள், மருமகன், மருமகள் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் அவர்களின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று அரசு மரியாதையை வழங்கியிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும்.

இந்த தாக்குதலுக்கு இன்று பதிலடி கொடுத்தது. பஹல்காம் தாக்குதல் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் இன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 9 பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தரைமட்டமாகி உள்ளன.
குறிப்பாக பாகிஸ்தானின் பஹவால்பூரில் உள்ள ஜாமியா மஜ்ஜித் சுபான் அல்லா என்ற இடத்தில் நம் நாடு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த இடம் என்பது ஜம்மு காஷ்மீரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்த இடத்தை நம் ஏவுகணை தரைமட்டமாக்கியது. இதற்கு முக்கிய காரணம் அந்த இடம் என்பது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடமாக செயல்பட்டு வந்தது தான்.

இங்கு தான் நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இங்கு பயங்கரவாத பயிற்சி என்பது பலருக்கும் கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூத் அசார் தப்பினார். மாறாக அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் வரை பலியாகினர். மசூத் அசாரின் அக்காள், அவரது கணவர், மசூத் அசாரின் மருமகன், அவரது மனைவி, மருமகள், 5 குழந்தைகள் என்று 10 பேர் பலியாகினர். இவர்கள் தவிர மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளி 3 பேரும், அதில் ஒருவரின் தாயாரும் இறந்தனர்.
இதையடுத்து இன்று மாலையில் மசூத் அசாரின் குடும்பத்தினரின் இறுதி சடங்கு என்பது நடந்தது. அதில் மசூத் அசாரின் குடும்பத்தினரின் உடல்கள் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது பாகிஸ்தானின் கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் ராணுவத்தில் இந்த இறுதி சடங்கில் பங்கேற்றனர். மேலும் அவர்கள் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்களின் சவப்பெட்டிகளை தோளில் சுமந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்றைய தாக்குதலில் பலியான லஷ்கர் இ தொய்பாவின் பயங்கரவாதிகளின் இறுதி சடங்கிலும் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் பங்கேற்றனர்.
பாகிஸ்தானை எடுத்து கொண்டால், எங்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு என்பதே கிடையாது என்று கூறி வருகிறது. ஆனால் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்களின் உடல்களை சுமந்து சென்றதோடு, அவர்களின் சவப்பெட்டியில் பாகிஸ்தான் கொடியை போர்த்தி இருப்பதன் மூலம் பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான உறவு என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இன்றைய தாக்குதலில் மொத்தம் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு சொந்தமான 4 பயங்கரவாத முகாம்கள், லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு சொந்தமான 3 பயங்கரவாத முகாம்கள், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புக்கு சொந்தமான 2 பயங்கரவாத அமைப்புகள் என்று மொத்தம் 9 பயங்கரவாத அமைப்பினரின் முகாம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
பகுதி வாரியாக பார்த்தால் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பஹவால்பூரில் உள்ள மார்கஸ் சுபன் அல்லா முகாம், தெஹ்ரா காலனில் உள்ள சர்ஜால் முகாம், கோட்லியில் உள்ள மார்கஸ் அப்பாஸ் முகாம், முசாபராபாத்தில் உள்ள சைதினா பிலால் முகாம் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. அதேபோல் லஷ்கர் இ தொய்பாவுக்கு சொந்தமான முரித்கேவில் உள்ள மார்கஸ் தொய்பா, பர்னாலாவில் உள்ள மார்கஸ் அஜில் ஹதித் முகாம், முசாபராபாத்தில் உள்ள ஷாவாய் நல்லா முகாம், ஹிஜாபுல் முஜாகிதீன் அமைப்பின் சியால்கேட்டில் உள்ளமெக்மூனா ஜோயா, கோட்லியில் உள்ள மாஸ்கர் ரஹீல் ஷாகித் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில்












Click it and Unblock the Notifications