For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஷரப் அனுமதியோடு பாக். முழுவதும் ப்ரீயாக வலம் வந்தார் பின் லேடன்... புதிய தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முஷரப்பிற்குத் தெரிந்தே பாகிஸ்தான் முழுவதும் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் சுதந்திரமாக பயணம் மேற்கொண்டார் என கார்லோட்டா கால் என்ற பெண் பத்திரிக்கையாளர் தனது புத்தகத்தில் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கார்லோட்டா கால் என்ற பெண் பத்திரிக்கையாளர் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கி இருந்து ‘தி நியூயார்க் டைம்ஸ்'க்கு செய்திகள் அனுப்பி வந்தார்.

அவர் தற்போது தி ராங் எனிமி: அமெரிக்கா இன் ஆப்கானிஸ்தான் 2001-2004 என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

வெளிச்சத்திற்கு வரும் மர்மங்கள்

வெளிச்சத்திற்கு வரும் மர்மங்கள்

அவரது புத்தகத்தில் பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் தங்கி இருந்த இடம் அப்போதைய அதிபர் முஷரப்புக்கு முன்னதாகவே தெரியும் என பரபரப்புக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடந்தால் முஷாரப் காலத்தில் நடந்த பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமாக சுற்றித் திரிந்தார்

சுதந்திரமாக சுற்றித் திரிந்தார்

அதேபோல், பாகிஸ்தானில் ஒசாமா பதுங்கி ஒளிந்து கொண்டு இருக்கவில்லை என்றும், அவர் சுதந்திரமாக நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார் என்றும் பரபரப்புக் கருத்துக்களை தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார் கார்லோட்டா.

ஐஎஸ்ஐ பாஷாவுக்கும் தெரியுமே...

ஐஎஸ்ஐ பாஷாவுக்கும் தெரியுமே...

மேலும் பின்லேடன் பதுங்கியிருந்த இடம் ஐஎஸ்ஐ தலைவராக இருந்த அகமது சுஜாகத் பாஷாவுக்கும் நன்றாகவே தெரிந்திருந்ததாகவும் கால் கூறியுள்ளார். இதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் கிடைத்திருப்பதாகவும் கால் கூறியுள்ளார்.

தீவிரவாத தலைவர்களையும் சந்தித்தார்

தீவிரவாத தலைவர்களையும் சந்தித்தார்

பின்லேடன் பாகிஸ்தான் முழுவதும் மடடுமல்லாமல், தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த வட மேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கும் பலமுறை போய் வர அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பல தீவரவாத தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார் என்றும் கால் கூறுகிறார்.

ரோட்டில் போகும் போது நோ தடை...

ரோட்டில் போகும் போது நோ தடை...

சாலை மார்க்கமாக பின்லேடன் கார் போகும்போது எந்தவித வாகனச் சோதனைக்கும் உள்ளாகாமல் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கால் தனது புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

English summary
Pakistan's Inter-Services Intelligence (ISI) agency not only knew that Bin Laden had been living in Abbottabad, Pakistan, but allowed him to travel easily around the country, according to Carlotta Gall of The New York Times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X