For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்மைக் கடவுள் பிரியபாஸுக்கு வந்த "சிக்கல்"!

Google Oneindia Tamil News

ரோம்: ஆண்மைக் கடவுள் என கிரேக்கர்களால் போற்றப்படும் பிரியபாஸ் கடவுளின் சுவர் சித்திரம் மூலம் புது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

உண்மையில் இந்த ஆண்மைக் கடவுள் பிரியபாஸ், ஆண்மைக் குறைபாடு உள்ளவராக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியிருப்பதுதான் இந்த சர்ச்சைக்குக் காரணம்.

Penis Disorder Found in Fertility God Pompeii Portrait

இந்த புதிய சர்ச்சைக்குக் காரணம், சித்திரத்தில் காணப்படும் பிரியபாஸ் கடவுளின் உருவம்தான். அதாவது அவரது ஆணுறுப்பு மிகவும் நீளமாக இருப்பதாக வரையப்பட்டுள்ளது. மேலும் தோல் முழுமைாயக மூடியுள்ளதாகவும் அது இருக்கிறது. இப்படி இருந்தால் நிச்சயம் அது ஆண்மைக் குறைபாடு உள்ளதாகத்தான் அர்த்தம். மேலும், இப்படிப்பட்ட ஆணுறுப்பு இருந்தால் அப்படிப்பட்டவர் மலட்டுத்தனம் கொண்டவராக இருக்கலாம் என்றும் சிறுநீரகவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எனவே பிரியபாஸை ஆண்மைக் கடவுள் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது என்பதும் அவர்களின் வாதமாகும். தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த சுவர் ஓவியம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகும்.

இந்த ஓவியமானது வெட்டிடி நகரி்ல் உள்ள அரங்கின் நுழைவாயிலில் உள்ளது. இந்த நகரமானது வெசூவியஸ் எரிமலையின் வெடிப்பிலிருந்து தப்பிய நகரமாகும். இந்த ஓவியத்தில் மிகவும் நீளமான ஆணுறுப்புடன் கூடியவராக பிரியபாஸ் நிற்கிறார்.

இந்த ஆணுறுப்பு காரணமாகவே இத்தனை காலமாக இவரை ஆண்மைக் கடவுள் என்று கிரேக்கர்கள் அழைத்து வருகின்றனர். ஆனால் இதைப் பார்த்தால் நிச்சயம் அவர் மலட்டுத்தனம் கொண்டவராகவே இருக்க முடியும் என்று நிபுணர்கள் புதுக் குழப்பத்தைக் கிளப்பி விட்டுள்ளனர்.

இதுகுறித்து இத்தாலியைச் சேர்ந்த பிரான்செஸ்கா மரியா கலஸ்ஸி என்பவர் கூறுகையில், அந்த ஆணுறுப்பில் மேல் தோலானது முழுமையாக மூடிக் காணப்படுகிறது. அப்படி இருந்தால் அதற்குப் பெயர் பிமோஸிஸ். அதாவது ஆணுறுப்பால் முழுமையாக இயங்க முடியாது. அந்தத் தோலை மேல் பக்கத்தில் கட் செய்து விட்டால்தான் ஆணுறுப்பு முழுமைாயக நீளும், செயல்பட முடியும். எனவே இந்த உறுப்பை வைத்துக் கொண்டு பிரியபாஸை ஆண்மைக் கடவுள் என்று கூற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஏன் இந்த ஓவியம் இதுபோல குறைபாடு உடைய ஆணுறுப்புடன் கூடியதாக வரையப்பட்டது என்பது தெரியவில்லை. ஒருவேளை பிரியபாஸின் குறையை அப்படியே கொண்டு வர வேண்டும் என்று கருதி அதை மறைக்காமல் ஓவியர் வரைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

English summary
One of Pompeii's most recognized frescoes, the portrait of the Greek god of fertility Priapus, holds an embarrassing truth, according to a new study of the 1st-century A.D. wall painting. Found in the entrance hall to the House of the Vettii, perhaps the most famous house to survive Mount Vesuvius's devastating eruption, the fresco shows the ever-erect Priapus with his engorged penis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X