ஹலோவீன் திருவிழாவில் 156 பேர் பலியான சோகம்! தென்கொரிய அதிபர் பதவி விலக வேண்டும்.. வெடித்த போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சியோல்: தென்கொரியாவில் கடந்த 31ம் தேதி நடைபெற்ற ஹலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 156 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விபத்திற்கு பொறுப்பேற்று அதிபர் 'யுன் சுக் இயோல்' பதவி விலக வேண்டும் என ஆயிரக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தி வருகின்றனர்.

ஹலோவீன்

ஹலோவீன்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஹலோவீன் எனப்படும் பேய் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்வாறு இருக்கையில் கடந்த 31ம் தேதியும் இத்திருவிழா விமர்சையான கொண்டாட்டங்களுடன் தொடங்கியது. இளைஞர்களும் இளம் பெண்களும் பேய்களை போன்று வேடமிட்டுக்கொண்டு நகர வீதிகளில் உலா வந்தனர். தலைநகர் சியோலில் உள்ள இடேவானில் லட்சக்கணக்கில் இவர்கள் கூறியிருந்தனர். இந்த பகுதியில் ஏராளமான பார்கள், கேளிக்கை விடுதிகள் இருப்பதால் இயல்பாகவே கூட்டம் அதிகரித்திருந்தது.

வதந்தி

வதந்தி

ஆனால் இவ்வளவு மக்கள் செல்லும் அளவுக்கு அங்கு சாலைகள் விசாலமாக இல்லை. இடேவான் பகுதி மலைப்பகுதியாகும். இங்குள்ள சாலை 45 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டவையாகும். இந்த குறுகிய சாலையில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடினால் எப்படி இருக்கும்? இவ்வாறு இருக்கையில் பிரபல 'கே பாப்' பாடகர் இந்த விழாவிற்கு வந்திருப்பதாக வதந்தி பரவியுள்ளது. அவரை பார்க்க முந்தியடித்து கூட்டத்தினர் முன்னேறியுள்ளனர். அப்போதுதான் இந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.

அஞ்சலி

அஞ்சலி

பலரும் மது போதையில் இருந்ததாலும், போதை பொருளை உபயோகித்திருந்ததாலும் இந்த விபத்திலிருந்து உடனடியாக மீள முடியவில்லை. மட்டுமல்லாது சுமார் 50 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். வெறும் ஒரு சில மணி நேரங்களில் சுமார் 156 பேர் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். மட்டுமல்லாது 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 10க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு மக்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.

பேரணி

பேரணி

பேரணியில், விபத்திற்கு பொறுப்பேற்று அதிபர் யுன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் உட்கட்டமைப்பு போதுமான அளவு மேம்படுத்தப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மெழுகுவர்த்தி ஊர்வலம் முடியும் இடத்தில் பொதுக்கூட்டத்தை 'Candlelight Action' எனும் முற்போக்கு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் அதிபர் மீது சரமாரியான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்றவர்கள் 'விபத்திற்கு அதிபர் பொறுப்பேற்க வேண்டும்' என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியிருந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+