குட் நியூஸ்.. ஃபைசர் தடுப்பூசி.. டெல்டா வைரஸை தடுக்கும் செயல்திறன் மிக்கது.. இஸ்ரேல் தகவல்!
ஜெருசலேம் : இஸ்ரேலில் டெல்டா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஃபைசர் தடுப்பூசி ஓரளவு செயல் திறன் மிக்கதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. தற்போது இஸ்ரேலில் 57% பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து நாடுகளும் மும்முரமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் இஸ்ரேல் அரசு கொரோனா தடுப்பூசியை மக்களிடையே கொண்டு செல்வதில் வெற்றி அடைந்துள்ளது. அந்த நாட்டில் கடந்த ஏப்ரல் மாதமே 70% க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

57% பேர் இரண்டு டோஸ்
தற்போது இஸ்ரேலில் 57% பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டதாக தரவுகள் காட்டுகின்றன. இந்த நிலையில் இஸ்ரேலில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. டெல்டா வகை வைரசே கொரோனா பாதிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலில் பிரதானமாக செயல்படும் ஃபைசர் தடுப்பூசி டெல்டா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஓரளவு செயல் திறன் மிக்கதாக இருப்பதாக இஸ்ரேல் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபைசர் தடுப்பூசியின் செயல் திறன்
ஃபைசர் தடுப்பூசி ஜூன் 6 முதல் ஜூலை தொடக்கத்தில் 64% மக்களை நோய்க்கு எதிராக பாதுகாத்தது. இந்த தடுப்பூசியின் முந்தைய செயல்திறன் 94% ஆக இருந்தது. டெல்டா மாறுபாடு பரவி வருவதால் ஃபைசர் செயல்திறன் கொஞ்சம் குறைந்துள்ளது என்று கூறியுள்ள இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் ஆனால் இது கடுமையான கொரோனாவுக்கு எதிராக வலுவான கேடயத்தை தொடர்ந்து அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மக்களை பாதுகாக்கிறது
தொற்றுநோய்களின் அறிகுறிகள் அதிகரித்தபோதிலும் ஃபைசர் தடுப்பூசி கடுமையான நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதாக தரவு காட்டுகிறது. முன்பு நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதை தடுப்பதில் 97% செயல் திறன் புரிந்த ஃபைசர் தடுப்பூசியின் செயல்திறன் தற்போது 93% ஆகக் குறைந்துள்ளது. ஃபைசர் செய்தித் தொடர்பாளர் டெர்விலா கீன் இஸ்ரேலின் தரவுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சான்றுகள் தெரிவிக்கின்றன
புதிய வைரஸ் பிறழ்வுகளுக்கு எதிராக தடுப்பூசியின் தொடர்ச்சியான பாதுகாப்பைக் காட்டும் ஆராய்ச்சியை டெர்விலா கீன் சுட்டிக்காட்டினார். சில சந்தர்ப்பங்களில் தடுப்பூசியின் செயல்திறன் சற்று குறையலாம். ஆனால் டெல்டா உள்ளிட்ட வைரஸ் வகைகளுக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி தொடர்ந்து வினை புரியும் என்று இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications