பிரிட்டன் தேர்தல் கணிப்பு பொய்யானதால் டிவி நேரலையில் புத்தகத்தை கடித்து தின்ற எழுத்தாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனில் நடந்த பொதுத் தேர்தலில் அரசியல் எழுத்தாளர் மேத்யூ குட்வின் தனது புத்தகத்தை நேரலை நிகழ்ச்சி ஒன்றில் மென்று தின்றார்.

பிரிட்டனில் நடந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர், கன்சர்வேட்டிவ் ஸ்காட்டிஸ் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலுக்கு முன்பாக, 'Brexit: Why Britain voted to leave the European Union' என்ற புத்தகத்தை மேத்யூ குட்வின், ஹரோல்டு கிளார்க், பால் ஒயிட்லி ஆகியோர் எழுதினர்.

Politics professor eats book live on air after promising to eat his words

இந்த புத்தகத்தில் தொழிலாளக் கட்சிக்கு 38 சதவீதத்துக்கு குறைவாக தான் வாக்குகள் கிடைக்கும் என்று எழுத்தாளர் மேத்யூ குட்வின் தெரிவித்திருந்தார். மேலும் தனது கணிப்பு பொய்யாகிவிட்டால் தான் எழுதிய புத்தகத்தை மென்று தின்பதாகவும் சூளுரைத்திருந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி 40.3 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து மேத்யூவின் கணிப்பு தவறாகிவிட்டதால் சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தனியார் தொலைகாட்சியின் நேரலை நிகழ்ச்சியில் மேத்யூ கலந்து கொண்டார். அப்போது அவர் நான் சொன்ன சொல்லை காப்பாற்ற தவறிவிட்டேன் என்றும் கணிப்பு பொய்த்துவிட்டதால் இப்போதே புத்தகத்தை தின்கிறேன் என்று கூறிவிட்டு அதை கடித்து மென்று தின்றார். இதனால் பரபரப்பு ஏற்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A politics expert ate his book on live TV after underestimating Labour's election performance.
Please Wait while comments are loading...