For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாடிகனில் இருந்து அழைப்பு.. திக்குமுக்காடிப்போன பிடன்.. வாழ்த்திய போப் ஆண்டவர்!

Google Oneindia Tamil News

வாடிகன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு போப் ஆண்டவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை தற்போதைய அதிபராக டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தபால் வாக்கு மோசடிகள் மூலம் அவருடைய வெற்றி தடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த குற்றச்சாட்டை ஜோ பிடன் நிராகரித்து வருகிறார். இந்த சூழலில் பிடனுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

போப் ஆண்டவர்

போப் ஆண்டவர்

இந்த சூழலில் வாடிகனில் உள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மத போதகர் போப் ஆண்டர் போப் பிரான்சிஸ் உடன் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ள ஜோ பிடன் பேசினார். அப்போது பிடனுக்கு போப் வாழ்த்து தெரிவித்தார்.

நன்றி சொன்ன பிடன்

நன்றி சொன்ன பிடன்

பிடனின் செய்தி தொடர்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பிடனுக்கு போப் ஆண்டவர் "ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதற்கு பிடன் நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்தார்" உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மனிதகுலத்தின் பொதுவான பிணைப்புகளை ஊக்குவித்து வரும் போப்பாண்டவருக்கு அவர் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

பிடன் விருப்பம்

பிடன் விருப்பம்

காலநிலை மாற்றம், வறுமை மற்றும் குடியேற்றம் போன்ற பிரச்சினைகளில் போப் ஆண்டவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிடன் கூறினார்" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 கருக்கலைப்புக்கு ஆதரவானவர்

கருக்கலைப்புக்கு ஆதரவானவர்

அமெரிக்காவில் உள்ள சில கத்தோலிக்க திருச்சபைகள், ஜோ பிடனின் வெற்றியை ஒப்புக் கொள்ள மறுத்தன. கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவளிப்பதால் கத்தோலிக்கர்கள் அவரை ஆதரிக்கக்கூடாது என்று வாதிட்டன. இருந்த போதிலும் ஜோ பிடனுக்கு போப் ஆண்டவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

English summary
Pope congratulates Joe Biden on election: Biden’s transition team said in a statement that the president-elect thanked Francis for “extending blessings and congratulations and noted his appreciation.” He also saluted the pontiff’s “leadership in promoting peace, reconciliation, and the common bonds of humanity around the world.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X