Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போப் ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதி.. முக்கிய அறுவை சிகிச்சை.. இப்போது உடல்நிலை எப்படி?

Subscribe to Oneindia Tamil

வாடிகன்: குடல் பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராகக் கருதப்படுபவர் 84 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.

கடந்த சில வாரங்களாகவே போப் பிரான்சிஸ் குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

போப் ஆண்டவர்

போப் ஆண்டவர்

இந்நிலையில், பெருங்குடல் சுருக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்த போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு அவர், அவர் இத்தாலி தலைநகர் ரோமில் அமைந்துள்ள ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் முதல்முறை

மருத்துவமனையில் முதல்முறை

போப் ஆண்டவராக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் பூரண நலமுடன் விரைவில் மருத்துவமனையில் இருந்து திரும்ப வேண்டும் என்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நலமுடன் இருக்கிறார்

நலமுடன் இருக்கிறார்

கத்தோலிக்க அமைப்பால் நடத்தப்படும் அந்த மருத்துவமனையில் 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நலமுடன் இருப்பதாகவும் திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை எவ்வித சிக்கலும் இன்றி முடிந்ததாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி அறிவித்துள்ளார்.

போப் உடல்நிலை

போப் உடல்நிலை

போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு ஏற்பட்ட நோய் காரணமாகச் சிறு வயதிலேயே அவரது நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல் பிரச்சினையும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மேலும், அவருக்கு இருக்கும் சியாட்டிக் பிரச்சினை காரணமாகக் கால்களையும் முதுகையும் இணைக்கும் நரம்புகளில் கடும் வலி ஏற்படும். இதற்காக அவர் பிசியோதெரபி சிகிச்சையும் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+