For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியேற வரும் அகதிகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டுக்கு போப் பிரான்சிஸ் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ட்ராஸ்பர்க்: வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்து குடியேறுவோர் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் நிலைப்பாடுகளுக்கு போப் பிரான்சிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது:

ஐரோப்பிய ஒன்றியம் என்பது தங்களிடம் இருந்து விலகி நிற்கக் கூடிய ஒரு அமைப்பாகத்தான் மக்களால் பார்க்கப்படுகிறது. மக்கள் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் சட்டங்களை இயற்றியுள்ள குற்றங்களுக்கு ஆளாகியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

Pope Francis attacks EU over treatment of immigrants

இத்தகைய நிலைப்பாடு மக்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது. ஐரோப்பிய ஒன்றிய நிறுவனத்தின் மீதான நம்பிக்கையின்மை என்பதை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து படகுகள் மூலம் ஐரோப்பாவுக்கு வந்து குடியேற வருபவர்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு ஏற்புடையது அல்ல. அத்தகைய குடியேறிகளுக்கு மத்தியத் தரைக்கடல் ஒரு பெரும் புதைகுழியாக இருப்பதை நாம் அனுமதிக்கவும் கூடாது.

இவ்வாறு போப் பிரான்சிஸ் தமது உரையில் தெரிவித்தார்.

English summary
The European Union has aged and grown tired, forfeiting ideas and ideals in favour of pen-pushing, Pope Francis has complained in the first papal address to the European parliament in quarter of a century. "We cannot allow the Mediterranean to become a vast graveyard," Pope Francis said, in reference to the thousands of migrants who drown every year as they seek to reach southern Europe from north Africa and the Middle Eas
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X