அமைதியானவர்களின் மனதுதான் சத்தமாக பேசும்.. ஸ்டீபன் ஹாக்கிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்!- வீடியோ

  லண்டன்: கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள் என்று சொன்ன விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். அவரது பொன்மொழிகள் அனைவரும் பிற்பற்றப்பட வேண்டியவை.

  இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் 1942ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவர்.

  Quiet people have the loudest minds - Stephen Hawking

  1963ஆம் ஆண்டு தனது இளம்வயதிலேயே நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புக்கு உள்ளானார். 2 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று கூறிய நிலையில் 76 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

  பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது கருத்துக்கள் பலராலும் பின்பற்றப்படுகிறது.

  • இந்த பிரபஞ்சத்தை விட பெரியது அல்லது பழமையானது எதுவுமில்லை.

  • கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்.

  • எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம், அங்கு எப்போதும் உங்களால் செயல்பட மற்றும் வெற்றிபெற முடிந்த ஏதாவது இருக்கும்.

  • நமது பேராசை மற்றும் மூடத்தனத்தின் மூலம் நாம் நம்மை அழித்துக்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறோம்.

  • நீங்கள் எப்போதும் கோபமாகவோ அல்லது குறை கூறிக்கொண்டோ இருந்தால், உங்களுக்கான நேரம் மற்றவர்களிடம் இருக்காது.

  • நமது நடவடிக்கையின் உயரிய மதிப்பினை நாம் தேடிப்பெற வேண்டும்.

  • அமைதியான மக்கள் சத்தமான மனதைக் கொண்டிருக்கிறார்கள்.

  • மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது.

  • உழைப்பு உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றது. உழைப்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது.

  • வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லாமல் இருந்தால் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.

  • நாம் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்த பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்புவது இயற்கையானதே.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Top 10 Stephen Hawking Quotes at BrainyQuote. Share the best quotes by Stephen Hawking with your friends and family.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற