என்ன இது...கடலில் இருந்து கிடைத்த அரிய வகை உயிரினம்...பேய் சுறா என்று பேர் வைத்த மக்கள்
அரிய வகை உயிரினம் ஒன்றை ரஷ்ய மீனவர் கண்டுபிடித்துள்ளார். பேய் சுறா என்றும் பேர் வைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாஸ்கோ: குட்டி டிராகன் போல காணப்படும் அரிய வகை உயிரிழனத்தை ரஷ்ய மீனவர் ஒருவர் கடலின் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளார், அதை அனைவரும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இந்த உயிரினத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
டிராகன் போன்ற உயிரினம் இதற்கு முன் பலரும் பார்த்திராத ஒன்று. இது சிமேரா அதாவது குருத்தெலும்பு மீன் வகை. இது பேய் சுறா என்றும் அழைக்கப்படுகிறது.
39 வயதான ரோமன் என்ற ரஷ்ய மீனவர் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்தார், அவரது வலையில் சிக்கியது இந்த புதிய உயிரினம்.

அழகிய உயிரினம்
அந்த மீனவர் அழகிய அந்த உயிரினத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பல அரியவகை கடல்வாழ் உயிரினங்களையும் அந்த மீனவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குட்டி டிராகன்
இந்த புகைபடத்தில் நீங்கள் பார்ப்பது புதிய வகை உயிரினம், புதிதாக குஞ்சு பொரித்த முட்டையிலிருந்து ஒரு டிராகன் குட்டி வெளியே வந்தது போல் இந்த உயிரினம் தெரிகிறது..

பேபி டிராகன்
இந்த புதிய உயிரினத்தை 'பேபி டிராகன்' என்று சமூக ஊடகத்தில் மக்கள் அழைக்கின்றனர். அதை பலரும் மிகவும் அதிக அளவில் பகிர்ந்தனர். 22 ஆயிரம் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.

எவ்ளோ பெரிய கண்கள்
இந்த மீன் பெரிய கண்கள், நீண்ட வால் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. அதன் உடலில் இறகு போன்ற ஒன்று உள்ளது. அதனால் அது பேபி டிராகன் என்று அழைக்கப்பட்டது. புதிய உயிரினத்தைப் பற்றி அனைவரும் அறிய விரும்பினர்.

சிக்கன் சாண்ட்விச்
இதை பார்த்து சமூக வலைதளங்களில் ஒவ்வொரு வரும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். யாராவது ஆச்சரியப்பட்டால், அதன் தோற்றத்தை ஜீரணிக்க முடியாமல் சிலர் இருக்கிறார்கள். சிலரோ சிக்கன் சாண்ட் விச் போல உள்ளதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications