For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுடப்பட்ட விமானம்.. கதறி அழுத மாயமான மலேசிய விமான பயணிகளின் உறவினர்கள்

By Siva
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டுத் தள்ளப்பட்ட செய்தியை பார்த்து மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்பட்டாலும் விமானத்தின் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம். ஹெச். 17 உக்ரைனில் ரஷ்யா எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது.

298 பேர்

298 பேர்

உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட விமானத்தில் இருந்த 298 பேர் உடல் கருகி பலியாகினர்.

உறவினர்கள்

உறவினர்கள்

உக்ரைனில் விமானம் சுட்டுத் தள்ளப்பட்ட செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்த மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த சீனர்களின் உறவினர்கள் கதறி அழுதுவிட்டனர்.

விமான பயணம்

விமான பயணம்

இப்போது எல்லாம் விமானத்தில் பயணம் செய்வது ரோலர்கோஸ்டரில் செல்வது போன்றாகிவிட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல்

தகவல்

விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அனைத்து நாடுகளும் சேர்ந்து பணியாற்றி தகவலை அளிக்க வேண்டுமே தவிர ஒன்றுக்கு ஒன்று எதிராக அல்ல என்று சீன பயணிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனர்கள்

சீனர்கள்

மாயமான மலேசிய விமானத்தில் 153 சீனர்கள் இருந்தனர். விமானம் கடலில் விழுந்துவிட்டது என்று கூறப்பட்டாலும் அது குறித்து அவ்வப்போது மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The families of those who went missing with the MH370, the Malaysian Airlines (MAS) which vanished soon after taking off from Kuala Lumpur on March 8 this year and was never found again, reacted to the MH17 tragedy emotionally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X