பிரபுதேவா மாதிரி ஆடனுமா?.. ரொம்ப ஈஸி.. எல்லாம் இந்த ஷூ பார்த்துக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டுள்ள நவீன ஷூவை அணிந்து கொண்டால் நடனப்புயல் பிரபுதேவா மாதிரி நாமும் டான்ஸ் ஆடலாம். அதற்கான சிறப்பு சென்சார் மற்றும் வைப்ரேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நடனம், இசையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. துக்கம், சந்தோஷம், வருத்தம், கோபம், தூக்கம் ஆகிய அனைத்து சூழல்களிலும் இசை நம்முடன் பயணிக்கிறது.

டான்ஸ் ஆட தெரியவில்லை எனிலும் அந்த இசைக்கேற்ப நம் கை, கால்கள் தானாக தாளம் போடும். நடனம் செல்ல நேரமின்மை, சிறந்தஆசிரியர் இன்மை உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முறையாக நடனத்தை கற்றுக் கொள்ள முடியவில்லை.

அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க நிறுவனம்

சாலிட் பிக்சல்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ரிதம் ஷூ, காலில் அணிந்து கொள்பவருக்கு நடனம் பயிற்றுவிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன ஷூக்கள் விற்பனைக்கு வரும் முன்னரே ரிதம் ஷூ மிகவும் பிரபலமாகியுள்ளது.

என்னென்ன டான்ஸ்கள்

என்னென்ன டான்ஸ்கள்

இந்த ஷூக்களை அணிவதன் மூலம் சால்சா, ஹிப் ஹாப், பிரேக்கிங், ஜாஸ், டாங்கோ, பச்சாதா, வால்ட்ஸ் உள்ளிட்ட நடனங்களை கற்றுக் கொள்ளமுடியுமாம்.

சென்சார்

சென்சார்

இந்த ஸ்மார்ட் ஷூவில் பல்வேறு சென்சார் மற்றும் வைப்ரேட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எந்த காலை எந்த சமயத்தில் அசைக்க வேண்டும் என்பதை அணிந்திருப்பவர்களுக்கு உணர்த்தும்.

வணிக ரீதியில் வெளியிடவில்லை

வணிக ரீதியில் வெளியிடவில்லை

நவீன ஷூவுக்கான தொடக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இவற்றை வணிக ரீதியில் வெளியிடுவதற்கான பணிகளுக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக இந்திய மதிப்பில் ரூ. 26,19,124 ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

வீடியோ வடிவில்...

இந்த ஸ்மார்ட் ஷூக்கள் செயலியுடன் இணைந்து நடன பயிற்சிகளுக்கான அசைவுகளை உணர்த்துவதோடு, நடனம் ஆடும் போது எவ்வாறு உடலை அசைக்க வேண்டும் என்பதை வீடியோ வடிவில் காண்பிக்கிறது. உங்கள் ஸ்மார்ட் போனுடனும் சின்க் செய்து கொள்ளலாம்.

செயல்பாடு எப்படி?

செயல்பாடு எப்படி?

சென்சார்கள் உதவியோடு ரிதம் செயலியுடன் இணைந்து கொள்ளும் ஸ்மார்ட் ஷூ நடன அசைவுகளை ஷூக்களுக்கு வைப்ரேஷன் மூலம் அனுப்பி கால் அசைவுகளோடு, உடலை எவ்வாறு அசைக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது. ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட இந்த ஷூக்கள் சென்சார்களுடன் இணைந்து கொள்ள ஏதுவாகிறது. இந்த ஸ்மார்ட் ஷூ விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Rhythm Smart Dancing Shoes use in-built sensors and vibrations to teach the wearer when to move, with a companion app coming tethered to help deliver visual dance lessons.
Please Wait while comments are loading...