For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெஞ்சில் டிகே.. ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு! டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா பேட்டிங்

Google Oneindia Tamil News

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படவில்லை. இளம் வீரரான ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று நிறைவடைந்து தற்போது அரையிறுதி சுற்று நடைபெற்று வருகிறது.

சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்ற 12 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே தலா ஒரு போட்டிகள் நடத்தப்பட்டன. 2 குழுக்களிம் அதிக புள்ளிகளை எடுத்த முதல் 2 அணிகள் என 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

2017 சாம்பியன்ஸ் டிராபி டூ 2022 உலகக்கோப்பை.. அஸ்வின் கொடுத்த மாஸ் கம்பேக்.. எப்படி சாதித்தார்? 2017 சாம்பியன்ஸ் டிராபி டூ 2022 உலகக்கோப்பை.. அஸ்வின் கொடுத்த மாஸ் கம்பேக்.. எப்படி சாதித்தார்?

இறுதி போட்டியில் பாகிஸ்தான்

இறுதி போட்டியில் பாகிஸ்தான்

குரூப் ஒன்றில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா VS இங்கிலாந்து

இந்தியா VS இங்கிலாந்து

இந்த நிலையில் 2 வது அரையிறுதி சுற்றுப் போட்டி இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே அடிலெய்டு மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும். இதில் இந்தியா வென்றால் 2007 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதும்.

தினேஷ் கார்த்திக் VS ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக் VS ரிஷப் பண்ட்

இந்த போட்டியில் வெற்றிபெற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அணி தேர்வு என்பது கடைசி வரை குழப்பமாகவே இருந்து வந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பர், பினிஷர் இடத்தில் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக்கை களமிறக்குவதா? அல்லது ரிஷப் பண்டை விளையாட வைப்பதா? என்ற விவாதம் நீடித்தது.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரிலும், ஆசிய கோப்பையிலும் சிறப்பான கீப்பிங்குடன், பினிஷர் இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் தினேஷ் கார்த்திக்கிற்கு டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இதில் அவர் பேட்டிங்கில் பெரிதாக விளையாடவில்லை என விமர்சனம் எழுந்தது.

ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு

ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு

எனவே தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு இளம் வீரரான ரிஷப் பண்டுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் கடைசியாக நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார்.

ரோகித் ஷர்மா

ரோகித் ஷர்மா

இதுகுறித்து பேசிய கேப்டன் ரோகித் ஷர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்டை அரையிறுதியை மனதில் வைத்து களமிறக்கியதாக தெரிவித்தார் உள்ளார். இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணிகளின் ஸ்பின்னர்களை சமாளிக்க இந்திய கிரிக்கெட் அணியில் இடது கை பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என ரோகித் ஷர்மா கூறினார்.

சஸ்பென்சுக்கு பதில்

சஸ்பென்சுக்கு பதில்

ரிஷப் பண்டுக்கு சற்று நேரம் கொடுக்க வேண்டும் எனக்கூறிய அவர் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது எனவும், அதை தற்போது சொல்ல முடியாது என்றும் கூறினார். இன்றைய போட்டியில் விளையாடும் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்டுக்கு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்றைய போட்டியில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். அதாவது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி தற்போது களமிறங்கியுள்ளது.

English summary
Wicket Keeper and left hand batsman Rishabh Pant selected in the Indian team played in the semi-final match against England in the T20 World Cup in Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X