For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போச்சே, போச்சே.. ரஷ்யா உக்கிர தாண்டவம்.. உக்ரைனில் ரூ.76.22 லட்சம் கோடி சொத்துகள் நாசம்

Google Oneindia Tamil News

கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் ரூ.76.22 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஒலெக் உஸ்டென்கோ கூறினார். மேலும் வணிகம் முடங்கிய நிலையில் கையிருப்பும் கரைந்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

உக்ரைனில் இன்று 16வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவை எதிர்த்து உக்ரைனும் போராடி வருகிறது. இருநாடுகளுக்கும் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண் இவ்வளவு பெரிய போஸ்ட்டா! 5 மாநிலத்தில் 4ஐ தூக்கிய பாஜக! தமிழ்நாடு பெண்

இதனால் உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. பொதுமக்கள் மீதான கருணையால் அவ்வப்போது ரஷ்யா சில நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்திருந்தாலும் பிற இடங்களில் ஏவுகணை தாக்குதல், குண்டுவீச்சை தொடர்கிறது.

 உக்ரைனில் சேதம்

உக்ரைனில் சேதம்

இதனால் குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலக கட்டங்கள் சேதமடைந்துள்ளன. குழந்தைகள் முதல் அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். மேலும் ரஷ்யா, உக்ரைன் தரப்பில் படை வீரர்களும் மரணமடைந்து வருகின்றனர். ரஷ்யா விதிகளை மீறி போர் குற்றத்தில் ஈடுபடுகிறது. இதனால் உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என உக்ரைன் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 பொருளாதார தடைகள்

பொருளாதார தடைகள்

இதற்கு செவிசாய்த்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் கோபத்தை அதிகரித்துள்ளது. கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பிற நாட்டு வீரர்கள் தங்களுக்கு ஆதரவாக உக்ரைனில் போர் புரிய வரலாம் என ரஷ்யா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போர் இப்போதைக்கு முடிவுக்கு வராது என அஞ்சப்படுகிறது.

 ரூ.76.22 லட்சம் கோடி

ரூ.76.22 லட்சம் கோடி

இந்நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஒலெக் உஸ்டென்கோ கூறியதாவது: ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டில் உள்ள உள்கட்டமைப்புகளான ரோடு, பாலம், மருத்துவமனைகள், உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை ஏறக்குறைய 100 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு ரூ.76.22 லட்சம் கோடி) அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இது தோராய மதிப்பு தான்.

Recommended Video

    Ukraine Labல் Viruses! Pathogens பற்றி Warn செய்த WHO | OneIndia Tamil
     கையிருப்பு எவ்வளவு

    கையிருப்பு எவ்வளவு

    நாட்டில் 50 சதவீத வணிகம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயங்கி வருகின்றன. தற்போதைய சூழலில் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் சரியானது. உக்ரைனின் நிதி கையிருப்பு தற்போது சுமார் 27.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது படையெடுப்பிற்கு முன்பு 30 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது'' என்றார்.

    English summary
    Rs 76.22 lakhs crore worth of property damaged by Russian Attack in Ukraine, says Oleg Ustenko chief economic adviser of Ukraine President Volodimyr Zelenzky. He also said that the stock was dissolving as business was paralyzed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X