For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.947 கோடி மதிப்புள்ள.. உக்ரைன் ஏவுகணையை நொடியில் காலிசெய்த ரஷ்யாவின் குட்டி ட்ரோன்- வீடியோ

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து 234வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் S-300 SAM ரக பாலிஸ்டிக் ஏவுகணையை ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கி அழித்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவியை செய்து வரும் நிலையில் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

தற்போது ரஷ்யா தனது ட்ரோன் தாக்குதலை வீடியோவாக வெளியிட்டுள்ளது.

தாக்குதலை திடீரென தீவிரப்படுத்திய ரஷ்யா.. சீறி பாய்ந்த 75 ஏவுகணைகள்.. நிலைகுலைந்த உக்ரைன்.. பலர் பலிதாக்குதலை திடீரென தீவிரப்படுத்திய ரஷ்யா.. சீறி பாய்ந்த 75 ஏவுகணைகள்.. நிலைகுலைந்த உக்ரைன்.. பலர் பலி

உதவி

உதவி

முன்னாள் சோவியத்தின் அங்கமாக இருந்த உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைவது என முடிவெடுத்ததிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. 234வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்கா மட்டுமே இதுவரை சுமார் ரூ.12.5 லட்சம் கோடி அளவுக்கு ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு செய்திருக்கிறது. அதாவது ரஷ்யா ஓராண்டுக்கு தனது ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ள தொகையில் இது மூன்றில் ஒரு பங்காகும்.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

மட்டுமல்லாது ரூ.59 ஆயிரம் கோடி அளவிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக நேற்று அறிவித்திருக்கிறது. இந்த ராணுவ உதவி தொகுப்பில் HIMARS எனப்படும் ராக்கெட் லாஞ்சர்கள், NASAM (National Advanced Surface-to-Air Missile System) ஏவுகணை லாஞ்சர் ஆகிய முக்கிய ஆயுதங்கள் அடங்கியுள்ளன. இந்த NASAM லாஞ்சர்களுக்கான ஏவுகணைகளை பிரிட்டன் வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இங்கிலாந்து தனது பங்கிற்கு, நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும், ஹோவிட்சர் எனப்படும் சிறிய ரக பீரங்கிகளையும் வழங்க இருக்கிறது. ஜெர்மனி IRIS-T எனப்படும் ஏவுகணை லாஞ்சர்களை வழங்கியுள்ளது.

தனிச்சிறப்பு

தனிச்சிறப்பு

ரஷ்யாவுக்கு எதிராக பல நாடுகள் கைகோர்த்த நிலையில், ரஷ்யா தனது அதிரடி தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வீடியோவில் உக்ரைன் ராணுவத்தின் S-300 ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா தாக்கி அழித்துள்ளது. இந்த ஒரு ஏவுகணையின் விலை மட்டும் சுமார் ரூ.947 கோடி. இதில் என்ன இந்த செய்தியில் என்ன தனிச்சிறப்பு என்று கேட்கிறீர்களா? இவ்வளவு மதிப்பு வாய்ந்த ஏவுகணையை அழித்தது வெறும் ஒரு சாதாரண ட்ரோன்தான்.

தாக்குதல்

தாக்குதல்

Lancet-3 எனப்படும் இந்த ட்ரோன் அதிகபட்சமாக 40 கி.மீ வரைதான் பயணிக்கும். எனவே இதைக்கொண்டு எப்படி ஏவுகணையை அழிக்க முடிந்தது என்று பலரும் வியப்படைந்துள்ளனர். இதற்கான காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உக்ரைன் S-300 ரக பாலிஸ்டிக் ஏவுகணையை சும்மா ஒன்றும் நிறுத்தி வைத்திருக்கவில்லை. அதற்கு பாதுகாப்பாக MANPADS எனப்படும் பாதுகாப்பு கருவியை அரணாக வைத்திருந்திருக்கிறது. ஆனால் சோதனை என்னவெனில் இந்த MANPADS எனப்படும் சிறிய ரக ராக்கெட் லாஞ்சரிலிருந்து பாயும் ராக்கெட் இலக்கை அதன் வெப்பநிலையை கணக்கில் கொண்டே தாக்கி அழிக்கும்.

 ட்ரோன்

ட்ரோன்

ரஷ்யாவின் தயாரிப்பான Lancet-3 ரக ட்ரோன் எரிபொருளால் இயங்குவதில்லை. அது மின்சாரத்தால் இயங்குகிறது. வெறும் 12கி.கி எடை மட்டுமே இருக்கும். இதனால் அதிகபட்சமாக 110கிமீ வேகத்தில்தான் போக முடியும். எனவே இது அதிக அளவு வெப்பத்தை வெளிப்படுத்தாது. ஆகவே MANPADS ராக்கெட் லாஞ்சர்களை கொண்டு இதனை தாக்க முடியாது. ஆனோல் Lancet-3ன் தாக்குதல் குறி தப்பவில்லை. தற்போது Lancet-3 நடத்திய தாக்குதல் வீடியோவாக வெளிவந்துள்ளன.

English summary
As the war between Ukraine and Russia continues for the 234th day, Russia has destroyed Ukraine's S-300 SAM ballistic missile with a drone. Ukraine continues to fight against Russia while the United States and Britain continue to provide military aid to Ukraine. Now Russia has released a video of its drone attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X